ஒரே ஒரு கப் ஜவ்வரிசி போதும்… அலாதியான சுவையில் வீட்டிலே லட்டு தயார்!!!

Author: Hemalatha Ramkumar
17 May 2023, 7:46 pm
Quick Share

அனைவருக்கும் பிடித்தமான லட்டுவை கடையில்தான் வாங்கி சாப்பிட வேண்டும் என்று அவசியமில்லை. அதேபோல எப்பொழுதும் கடலை மாவில் தான் லண்டு செய்ய வேண்டும் என்பதும் இல்லை. ஒரு கப் ஜவ்வரிசி இருந்தால் போதும் அசத்தலான சுவையில் லட்டு செய்துவிடலாம். இப்பொழுது ஜவ்வரிசி வைத்து எப்படி லட்டு செய்வது என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

ஜவ்வரிசி- ஒரு கப்
முந்திரி பருப்பு- 10 ஏலக்காய் பொடி- 1/4 தேக்கரண்டி
நெய்- 2 தேக்கரண்டி சர்க்கரை- ஒரு கப் பைனாப்பிள் எசன்ஸ்- தேவைக்கேற்ப
ஃபுட் கலர்- தேவைக்கேற்ப

செய்முறை:
ஜவ்வரிசி லட்டு செய்வதற்கு ஒரு கப் ஜவ்வரிசி எடுத்துக் கொள்ளவும். இதனை கழுவி சுத்தம் செய்து கொள்ளலாம். பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஜவ்வரிசியை ஊற வைக்கவும். ஜவ்வரிசி குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஊற வேண்டும். அடுத்தபடியாக லட்டு செய்வதற்கு தேவையான பிற பொருட்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது ஒரு கடையை அடுப்பில் வைத்து இரண்டு தேக்கரண்டி நெய் ஊற்றவும். நெய் உருகியதும் அதில் முந்திரி பருப்புகள் சேர்த்து அது பொன்னிறமாக மாறும் வரை வறுத்து ஒரு தட்டில் எடுத்துக் கொள்ளலாம். மீதம் இருக்கக்கூடிய அதே நெய்யில் நாம் ஊற வைத்த ஜவ்வரிசியை தண்ணீரை வடிகட்டிய பின் சேர்த்து கிளறி கொண்டே இருக்க வேண்டும். ஐந்து நிமிடம் நன்றாக கிளறிய பின்பு ஜவ்வரிசி கெட்டியாகி வரும் இப்பொழுது இதில் ஃபுட் கலர் சேர்க்கவும்.

பின்னர் ஒரு நிமிடம் கிளறி தேவையான அளவு சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். சர்க்கரை மற்றும் ஜவ்வரிசி கடாயில் ஒட்டாமல் வரும் வரை கைவிடாமல் கிளறி கொண்டே இருங்கள். இப்பொழுது வாசனைக்காக உங்களுக்கு பிடித்தமான ஏதேனும் ஃபிளேவரை கூட சேர்த்துக் கொள்ளலாம்.

ஜவ்வரிசி நன்றாக கெட்டியானதும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும். கடைசியாக நாம் வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்புகளை சேர்த்து அடுப்பை அணைத்துக் கொள்ளலாம். உங்கள் கைகள் சூடு பொறுக்கும் அளவுக்கு கலவை ஆறி வந்தவுடன் அதனை சிறு உருண்டைகளாக உருட்டி லட்டு பிடிக்கவும். அவ்வளவுதான் சுவையான ஜவ்வரிசி லட்டு அசத்தலாக தயார். நிச்சயமாக இதனை உங்கள் வீட்டில் நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.

Views: - 1851

0

0