5 நிமிஷத்தில் எச்சில் ஊற செய்யும் அசத்தலான அல்வா எப்படி செய்யலாம்னு தெரிஞ்சிக்கோங்க!

16 July 2021, 6:09 pm
how-to-make-the-most-sweet-halwa-160721
Quick Share

அல்வா என்றாலே செய்வதற்கு நேரம் ஆகும் என்பதால் அதனை தயார் செய்ய பொருமை மிக அவசியம் என்பது நமக்கு தெரியும். ஆனால் இன்று நாம் செய்யப்போகும் அல்வாவை சுலபமாக பத்தே நிமிடத்தில் செய்து விடலாம். எப்போதும் கோதுமை, பூசணி போன்ற உணவு பொருட்களை கொண்டு தான் அல்வா செய்வோம். இன்று நம் வீட்டில் மீந்து போன ஒரு கப் சாதத்தை கொண்டு அல்வா செய்வது எப்படி என பார்க்கலாம் வாங்க….

தேவையான பொருட்கள்:

●வடித்த சாதம்- 1 கப்

●சர்க்கரை- 1 கப்

●நெய்- 1/4 கப்

●ஏலக்காய் பொடி- 1/4 தேக்கரண்டி

●உப்பு- ஒரு சிட்டிகை

●கேசரி பவுடர்- 2 சிட்டிகை

●முந்திரி பருப்பு- 10

செய்முறை:

சாதத்தின் கொழ கொழப்பு போவதற்கு முதலில் அதனை நாம் வறுத்து எடுத்து கொள்ள போகிறோம். அதற்கு ஒரு கடாயை அடுப்பில் வைத்து 1 தேக்கரண்டி நெய் விட்டு அழுத்தி எடுத்த ஒரு கப் சாதத்தை அதில் சேர்க்கவும். இரண்டு நிமிடங்கள் இந்த சாதத்தை நன்றாக வறுத்து கொள்ளவும். 

பிறகு சாதம் முழுவதுமாக ஆறியதும் அதனை மிக்ஸியில் போட்டு 1/4 கப் அளவு தண்ணீர் ஊற்றி மழ மழவென்று அரைத்து எடுத்து கொள்ளவும். இப்போது அதே கடாயை அடுப்பில் வைத்து மேலும் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு 10 போல முந்திரி பருப்பை பாதி பாதியாக உடைத்து வறுத்து எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளுங்கள்.

மீண்டும் அதே கடாயில் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு நாம் அரைத்து வைத்த சாதத்தை சேர்த்து கிளறவும். ஒரு நிமிடம் நன்கு கிளறிய பிறகு அதில் ஒரு கப் அளவு சர்க்கரை சேர்த்து கொள்ளவும். சர்க்கரை சேர்ந்தவுடனே சாதம் அல்வா பதத்திற்கு வர ஆரம்பிக்கும். ஒரு கப் சர்க்கரை அதிகம் என நீங்கள் நினைத்தால் உங்கள் சுவைக்கு ஏற்றவாறு சர்க்கரையை குறைத்தும் கொள்ளலாம்.

இப்போது இதில் கலருக்காக இரண்டு சிட்டிகை கேசரி பொடி, வாசனைக்காக 1/4 தேக்கரண்டி ஏலக்காய் பொடி மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கிளறுங்கள். இப்போது கொஞ்சம் கொஞ்சமாக நெய் விட்டு கிளறி வாருங்கள். நெய் அனைத்தும் வெளியேறி அல்வா சுருண்டு வந்த பின்னர் வறுத்து வைத்த முந்திரி பருப்பை போட்டு அடுப்பை அணைத்து விடலாம்.

Views: - 47

0

0

Leave a Reply