உருளைக்கிழங்கு சிப்ஸ்: வெறும் ஐந்தே நிமிடத்தில் தயாராகும் உங்கள் ஃபேவரெட் டீ டைம் ஸ்நாக்ஸ்!!!

Author: Hemalatha Ramkumar
17 November 2022, 7:31 pm
Quick Share

உருளைக்கிழங்கு வைத்து செய்யப்படும் தின்பண்டங்கள் எல்லாமே நம் அனைவருக்கும் ஃபேவரெட் தான். அதில் உருளைக்கிழங்கு சிப்ஸிற்கு தனி இடமுண்டு. அப்படி நீங்கள் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கு சிப்ஸை இனி கடைகளில் வாங்கி சாப்பிட தேவையில்லை. வெறும் ஐந்து நிமிடங்களில் எளிதாக வீட்டிலே தயார் செய்து விடலாம்.

உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்வதற்கு பெரிய உருளைக்கிழங்காக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். அதோடு இனிப்பு சுவை இல்லாத உருளைக்கிழங்கு தான் வாங்க வேண்டும். ஏனெனில், உருளைக்கிழங்கு இனிப்பு சுவையோடு இருந்தால் அது சிப்ஸின் சுவையையே கெடுத்து விடும்.

இப்போது உருளைக்கிழங்கை தோல் சீவி கொள்ளவும். தோல் சீவியதும் அதனை கழுவிக் கொள்ளவும். அடுத்து சீவலை எடுத்து அதில் உருளைக்கிழங்கை சீவவும். அதன் ஈரப்பதம் போகும் வரை தனித்தனியாக வைத்து உலர விடவும். பின்னர் அடுப்பில் எண்ணெயை வைத்து காய விடுங்கள்.

எண்ணெய் காய்ந்ததும் சீவி வைத்த உருளைக்கிழங்கை போடவும். எண்ணெயின் சலசலப்பு அடங்கி, உருளைக்கிழங்கு மிதக்கும் போது அதனை வெளியே எடுத்து விடலாம். இப்போது ஒரு பாத்திரத்தில் உப்பு மற்றும் தனி மிளகாய் தூள் சேர்த்து அதில் உருளைக்கிழங்கு சிப்ஸை போட்டு குலுக்கவும். இப்போது மொறு மொறுப்பான காரசார உருளைக்கிழங்கு சிப்ஸ் தயார். இதனை காற்று புகாத டப்பா ஒன்றில் போட்டு வைத்துக் கொள்ளலாம்.

Views: - 123

0

0