ஆந்திரா ஸ்பெஷல் காரசாரமான இஞ்சி சட்னி!!!

Author: Hemalatha Ramkumar
17 July 2022, 7:12 pm
Quick Share

ஆந்திர மாநிலத்தின் ஸ்பெஷலான சட்னி வகையில் ஒன்று இஞ்சி சட்னி. இந்த சட்னியில் இஞ்சி பிரதானமாக சேர்க்கப்படுவதால், இது ஏராளமான மருத்துவ குணங்கள் வாய்ந்ததாக அமைகிறது. வயிறு உப்புசம், நெஞ்செரிச்சல், அஜீரண கோளாறு போன்ற பல விதமான வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும் இஞ்சியை வைத்து ஒரு சுவையான சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

நறுக்கிய இஞ்சி – 1/2 கப் கடலை பருப்பு – 2 தேக்கரண்டி
வரமிளகாய் – 5 கறிவேப்பிலை – ஒரு கொத்து
புளி – ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு பொடித்த வெல்லம் – 1/2 தேக்கரண்டி
சமையல் எண்ணெய் – 2 தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி

செய்முறை:
*முதலில் இஞ்சியை தோல் நீக்கி நறுக்கி வைத்து கொள்ளுங்கள்.

*புளியை தண்ணீர் ஊற்றி ஊற வைத்து கொள்ளலாம்.

*இப்போது வாணலியில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும், இஞ்சி சேர்த்து வதக்கவும்.

*அதே வாணலியில் வர மிளகாய், கடலைப்பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வறுத்து கொள்ளவும்.

*இவை அனைத்தும் நன்கு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளவும்.

*அதனுடன் வெல்லம் மற்றும் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.

*இதற்கு ஒரு தாளிப்பு கொடுக்க கடுகு, உளுத்தம்பருப்பு மற்றும் கறிவேப்பிலையை எண்ணெயில் தாளித்து கொட்டவும்.

*அவ்வளவு தான். காரசாரமான இஞ்சி சட்னி தயார்.

Views: - 626

0

0