வீடே கம கமக்கும் ஆந்திரா ஸ்டைல் வெண்டைக்காய் குழம்பு ரெசிபி!!!

Author: Hemalatha Ramkumar
21 October 2021, 10:50 am
Quick Share

நாம் பல குழம்பு வகைகள் செய்வது உண்டு. சாம்பார், மோர் குழம்பு, புளிக் குழம்பு போன்றவை நாம் அடிக்கடி செய்யும் குழம்பு வகைகள். இன்று கொஞ்சம் ஸ்பெஷலாக ஆந்திரா ஸ்டைல் வெண்டைக்காய் குழம்பு எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய்- 5
கடுகு- 1/4 தேக்கரண்டி
சீரகம்- 1/4 தேக்கரண்டி
வர மிளகாய்- 2
பச்சை மிளகாய்- 1
சின்ன வெங்காயம்- 10
தக்காளி- 1
பெருங்காயத் தூள்- 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை- ஒரு கொத்து
புளி கரைசல்- 1/4 கப்
பூண்டு- 6பல்
மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி
மல்லித்தூள்- 2 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்- 3 தேக்கரண்டி

செய்முறை:
*குழம்பு செய்வதற்கு முதலில் வெண்டைக்காயை நறுக்கி அதனை ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி ஐந்து நிமிடங்கள் வறுத்து தனியாக வைத்துக் கொள்ளலாம்.

*இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயத் தூள் சேர்க்கவும்.

*கடுகு பொரிந்தவுடன் வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பூண்டு ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.

*வெங்காயம் வதங்கியதும் அதில் நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.

*தக்காளி வதங்கும் வேலையில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

*மசாலா பச்சை வாசனை போனதும் அதில் புளி கரைசல் ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விடவும்.

*கடைசியில் ஒரு துண்டு வெல்லம் சேர்த்து அடுப்பை அணைத்து விடலாம்.

*சுவையான ஆந்திரா ஸ்டைல் வெண்டைக்காய் குழம்பு தயார்.

Views: - 171

0

0