வித்தியாசமான ருசியில் பத்தே நிமிடத்தில் செய்யக்கூடிய குடை மிளகாய் சாதம்!!!

9 September 2020, 11:10 am
capsicum Rice - Updatenews360
Quick Share

என்ன தான் ஏராளமான உணவு வகைகள் இருந்தாலும் பெரும்பாலான பெண்களுக்கு ஏற்படும் ஒரு குழப்பம் ‘என்ன சமைப்பது’ என்பது தான். வித விதமாகவும் சமைக்க வேண்டும், அதே சமயம் ருசியாகவும் இருக்க வேண்டும். அப்படி ஒரு அருமையான உணவு வகை தான் குடை மிளகாய் சாதம். இதனை மிக சுலபமாக செய்து விடலாம். ருசியிலும் இதனை அடித்து கொள்ள முடியாது. குடை மிளகாய் சாதம் எவ்வாறு செய்வது என பார்க்கலாம் வாங்க….

தேவையான பொருட்கள்:

குடை மிளகாய்- 2

வடித்த சாதம்- 1 கப்

எண்ணெய்- ஒரு தேக்கரண்டி

நெய்- 3 தேக்கரண்டி

கடலைப்பருப்பு- ஒரு தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு- ஒரு தேக்கரண்டி முழு தனியா- 2 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய்- 6

ஒரு தேக்கரண்டி

புளி- சிறிதளவு 

துருவிய தேங்காய்- 2 தேக்கரண்டி

பெருங்காய தூள்- 1/4 தேக்கரண்டி

மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி

கடுகு- 1/2 தேக்கரண்டி

உப்பு- தேவையான அளவு

செய்முறை:

குடை மிளகாய் சாதம் செய்ய முதலில் நாம் ஒரு மசாலா தயார் செய்ய வேண்டும். அதற்கு ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம்பருப்பு போட்டு இரண்டு நிமிடங்கள் வறுக்கவும். அடுத்து இரண்டு தேக்கரண்டி முழு தனியா, 6 காய்ந்த மிளகாய், ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து அதன் நிறம் மாறும் வரை வறுக்கவும். 

இப்போது சிறிதளவு புளி, இரண்டு தேக்கரண்டி தேங்காய், 1/4 தேக்கரண்டி பெருங்காய பொடி, 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் மசாலாவிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். தேங்காயின் ஈரப்பதம் போகும் வரை வதக்கினால் போதும். பிறகு இதனை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.

கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து மூன்று தேக்கரண்டி நெய், 1/2 தேக்கரண்டி கடுகு, 2 நறுக்கிய குடை மிளகாய், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். நாம் அரைத்து வைத்த மசாலாவில் இருந்து 3 – 4 தேக்கரண்டி சேர்த்து கொள்ளவும். அடுத்து வேக வைத்த சாதத்தை சேர்த்து நன்றாக கிளறவும். கடைசியில் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடாக பரிமாறவும்.

Views: - 11

0

0