ருசியில் கொஞ்சமும் குறையாத தக்காளி இல்லாத இந்த ரசத்தை உங்க வீட்லயும் டிரை பண்ணுங்க!!!

Author: Hemalatha Ramkumar
26 November 2021, 1:12 pm
Quick Share

தமிழ்நாட்டில் பெரும்பாலான வீடுகளில் மதிய உணவிற்கு சாதம், குழம்பு, ரசம், கூட்டு, பொரியல் என அசத்தலாக இருக்கும். ஆனால் இன்று காய்கறி விற்கும் விலையைப் பார்த்தால் வெறும் கஞ்சி சமைத்து சாப்பிட வேண்டியது தான் போல என நிறைய நபர்கள் நினைக்கத் தொடங்கி விட்டனர். அதிலும் தக்காளி விலை தங்கம் விலை போல கிடுகிடுவென உயர்த்து வருகிறது. ஆனால் கொஞ்சம் பொறுமையாக இருங்கள். தக்காளி இல்லாமல் சமைக்க முடியாதா என்ன… அந்த வகையில் நாம் இன்று தக்காளி பயன்படுத்தாமல் ரசம் எப்படி வைப்பது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
மிளகு- 2 தேக்கரண்டி
சீரகம்- 1 தேக்கரண்டி
பூண்டு- 10 பல்
புளி- எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
கொத்தமல்லி தழை- சிறிதளவு
கறிவேப்பிலை- ஒரு கொத்து
கடுகு- 1/2 தேக்கரண்டி
எண்ணெய்- 1 தேக்கரண்டி

செய்முறை:
*முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் புளியை கரைத்து வையுங்கள்.

*அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.

*இப்போது மிளகு, சீரகம் மற்றும் பூண்டு ஆகியவற்றை நுணுக்கி கலவையில் சேர்க்கவும்.

*பின்னர் கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து கைகளால் கலந்து விடவும்.

*இதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.

*இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளிக்கவும்.

*கடுகு பொரிந்தவுடன் அதில் கலவையை ஊற்றவும்.

*ரசம் பொங்கி வரும் போது அடுப்பை அணைத்து ரசத்தை மூடி விடலாம்.

*அவ்வளவு தான்… சுவையான ரசம் தயார்.

Views: - 226

0

0