வித்தியாசமான ருசியில் குடை மிளகாய், பன்னீர் ரெசிபி!!!

Author: Hemalatha Ramkumar
19 November 2021, 1:03 pm
Quick Share

பன்னீர் என்றாலே ஸ்பெஷல் தான். அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு வகை இது. அத்தகைய பன்னீரை இன்னும் ஸ்பெஷலாக மாற்ற குடை மிளகாய், பன்னீர் மசாலா எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:
குடை மிளகாய்-1
பன்னீர்- 200 கிராம்
பட்டாணி- 50 கிராம்
வெங்காயம்- 2
தக்காளி-1
மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி
சப்ஜி தூள்- 1 தேக்கரண்டி
எண்ணெய்- 1 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
கசூரி மேத்தி- 1 தேக்கரண்டி
பட்டை- 1
கிராம்பு- 2
ஏலக்காய்- 1
பிரியாணி இலை- 1

செய்முறை:
*குடை மிளகாய், பன்னீர் மசாலா செய்வதற்கு முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும்.

*எண்ணெய் காய்ந்ததும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்க்கவும்.

*பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

*வெங்காயம் ஓரளவு வதங்கியதும் அதில் குடை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

*வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் அதில் தக்காளி சேர்த்து வதக்கலாம்.

*தக்காளி வதங்கிய பின் அதில் வேக வைத்த பட்டாணியை சேர்க்கவும்.

*இந்த சமயத்தில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சப்ஜி தூள் சேர்க்கவும்.

*பின் நறுக்கி வைத்துள்ள பன்னீர் சேர்த்து கிளறவும்.

*பன்னீர் மசாலாவோடு நன்கு கலந்ததும் அதில் கசூரி மேத்தி சேர்த்து அடுப்பை அணைத்து விடலாம்.

*அவ்வளவு தான்… சுவையான குடை மிளகாய் பன்னீர் மசாலா இப்போது தயார்.

Views: - 157

0

0

Leave a Reply