வெறும் ஒரு மணி நேரத்தில் கெட்டியான, சுவையான தயிர் செய்வது எப்படி???

Author: Hemalatha Ramkumar
12 October 2021, 9:13 am
Quick Share

ஒரு சிலரது உணவு தயிர் இல்லாமல் முழுமையடையாது. தயிர் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். இதில் எக்கச்சக்கமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆனால் பலர் தயிரை கடைகளில் வாங்கி பயன்படுத்துகின்றனர். உண்மையில் வீட்டில் தயார் செய்த தயிர் போன்ற நன்மைகளை கடைகளில் வாங்கி பயன்படுத்தும் தயிர் நமக்கு தராது. பலர் கடைகளில் வாங்கி பயன்படுத்துவதற்கான காரணம் அவர்களுக்கு வீட்டில் கெட்டி தயிர் செய்ய வராதது தான். மேலும் பலர் தயிருக்கு உரை ஊற்ற மறந்துவிடுவதாலும் கடைகளில் வாங்கி பயன்படுத்துவர். உங்களுக்காகவே இந்த டிப்ஸ். ஒரு மணி நேரத்தில் கெட்டியான சுவையான தயிர் எப்படி தயார் செய்வது என பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:
பால்- 1/2 லிட்டர்
தயிர்- 2 தேக்கரண்டி
தண்ணீர்- 50 ml

செய்முறை:
*முதலில் 1/2 லிட்டர் பாலில் 50 ml தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

*பால் கொதித்ததும் அதனை ஆற வைக்கவும்.

*இப்போது வெதுவெதுப்பான பாலில் இரண்டு தேக்கரண்டி தயிர் சேர்க்கவும்.

*இதனை நான்கில் இருந்து ஐந்து முறை நன்கு ஆற்றி கொள்ளவும்.

*அப்போது தான் பாலோடு தயிர் நன்றாக கலக்கும்.

*அடுத்து ஒரு குக்கரில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதனை கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

*குக்கரில் இருக்கும் தண்ணீர் மீது நாம் தயார் செய்து வைத்த பால் தயிர் கலவையை வைக்கவும்.

*இப்போது குக்கரை மூடி விசில் போட்டு அப்படியே ஒரு மணி நேரத்திற்கு வைக்கவும்.

*ஒரு மணி நேரம் கழித்து பார்த்தால் கெட்டியான தயிர் தயார்.

Views: - 169

0

0

Leave a Reply