கல்யாண வீட்டு பைனாப்பிள் கேசரி மணல் மணலாய் வர என்ன செய்வது…???

28 November 2020, 12:09 pm
Quick Share

கல்யாணம் என்றாலே முதலில் முக்கியத்துவம் அளிக்கப்படுவது உணவிற்கு தான். அனைவரும் வயிறார சாப்பிட்டு மணமக்களை மனதார வாழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் உணவிற்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. இதனால் கல்யாண வீட்டு உணவு என்றாலே பிரமாதமாக இருக்கும். அதிலும் பைனாப்பிள் கேசரி பற்றி சொல்லவே வேண்டாம். மணல் மணலாய் உதிரி உதிரியாய் சாப்பிடுவதற்கே ஆசையாக இருக்கும். இந்த கல்யாண வீட்டு பைனாப்பிள் கேசரியை சரியான பக்குவத்தில் வீட்டில் எப்படி செய்வது என இப்போது பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்:

ரவை- 100 கிராம்

சர்க்கரை- 100 கிராம்

தண்ணீர்- 200 ml

அன்னாசிப்பழத் துண்டுகள்- 1/2 கப்

ஏலக்காய்- இரண்டு சிட்டிகை

குங்குமப்பூ- சிறிதளவு

உப்பு- ஒரு சிட்டிகை

நெய்- 4 தேக்கரண்டி

கடலை எண்ணெய்- 4 தேக்கரண்டி

முந்திரி பருப்பு, திராட்சை- சிறிதளவு

செய்முறை:

கேசரி செய்வதற்கு முதலில் ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து நெய் மற்றும் கடலை எண்ணெய் ஆகிய இரண்டையும்  ஊற்றவும். நெய் உருகிய பின் இதில் இருந்து பாதி அளவை தனியாக எடுத்து வைத்து கொள்ளுங்கள். பிறகு முந்திரி பருப்பு மற்றும் திராட்சை ஆகிய இரண்டையும் சேர்த்து வறுக்கவும்.

அதே நெய்யில் ரவையை போட்டு வறுக்கவும். ரவை பொன்னிறமாக மாறி  தனித்தனியாக வரும் வரை மிதமான தீயில் கிளறிக் கொண்டே இருங்கள். அடுத்ததாக குங்குமப்பூ மற்றும் அன்னாசிப்பழத் துண்டுகளை சேர்த்து வதக்கவும். இவை நன்றாக வதங்கியதும் 200 ml அளவிற்கு சூடான நீரை ஊற்றவும். 

ரவையில் எந்த வித கட்டியும் இல்லாத அளவிற்கு கிளறி விட வேண்டும். ரவையை கிளறிய பின் சர்க்கரையை  சேர்க்கவும். இப்போது நாம் முதலில் தனியாக எடுத்து வைத்த நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கிளறி விடவும். இரண்டு சிட்டிகை ஏலக்காய் பொடியை தூவி கொள்ளவும். இதனை மிதமான தீயில் இரண்டு நிமிடங்கள் கிளறி கொண்டே இருக்க வேண்டும். அவ்வளவு தான்… உதிரி உதிரியாய் ருசியான கல்யாண கேசரி தயார்.

Views: - 21

0

0