நான்கே பொருட்களில் செய்யலாம் குண்டு குண்டு ருசியான சைவ குலோப் ஜாமுன்!!!

27 November 2020, 11:11 am
Quick Share

குளிர்காலம் வந்து விட்டது.  எனவே சுட சுட குலாப் ஜமுன்களை மகிழ்விக்கும் நேரமும் வந்தாச்சு! இருப்பினும், நீங்கள் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் சாப்பிடுவதாக முடிவு  செய்திருந்தால், இதனால் உங்களுக்கு பிடித்த இனிப்புகளை சாப்பிடுவதைத் தவறவிட்டால், சுவைக்கு சமரசம் செய்யாத ஒரு சிறப்பு செய்முறையை இந்த பதிவில் பார்ப்போம். எந்த நேரத்திலும் எளிமையாக செய்யக்கூடிய சைவ குலாப் ஜமுன்களை ஜாலியாக என்ஜாய் பண்ணுங்க.  

தேவையான பொருட்கள்: 

4 – பிரட் துண்டுகள் 

தேவைக்கேற்ப- தேங்காய் பால்

½ கப்- சர்க்கரை 

1 கப் – நீர் 

பொரிக்க தேவையான அளவு- எண்ணெய்

செய்முறை:

* ஜாமுன் செய்வதற்கு முன்பு முதலில் அதற்கு தேவையான சர்க்கரை பாகு செய்து கொள்ளலாம். அதற்கு ஒரு தடிமனான பாத்திரத்தில், ஒரு கப் தண்ணீர் ஊற்றி அதில் 1/2 கப் சர்க்கரையை சேர்க்கவும். சர்க்கரை கரைந்து கலவை சற்று தடிமனாகவும், ஒட்டும் தன்மையுடனும் இருக்கும் வரை சர்க்கரை மற்றும் தண்ணீரை குறைந்த தீயில் கொதிக்க வைக்கவும்.  

* இப்போது அடுப்பை  அணைத்து சர்க்கரை பாகினை குளிர்விக்க அனுமதிக்கவும். இதற்கு இடையில் ரொட்டி துண்டுகளின் பிரவுன் நிறத்தில் இருக்கும் ஓரங்களை அகற்றி சிறிய துண்டுகளாக வெட்டவும். 

* படிப்படியாக தேங்காய் பால் சேர்த்து மாவாக பிசையவும். நீங்கள் விரும்பும் அளவுக்கு ஏற்ப சிறிய சிறிய பந்துகளாக  உருட்டவும்.  

* உங்கள் கைகளை சுத்தம் செய்து, சிறிதளவு நெய் தடவி கொள்ளுங்கள். பந்துகளை எந்த வித கிராக்கும் இல்லாத அளவிற்கு மீண்டும் மென்மையாக்குங்கள். 

*இப்போது கடாயில்  எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும்  பந்துகளை போடவும். அவை சற்று அடர் பழுப்பு நிறமாக மாறும் வரை பொரிக்கவும். 

* சர்க்கரை பாகை மீண்டும் சூடாக்கி, அதில் வறுத்த பந்துகளை ஊற வைக்கவும். இதனை 2 மணி நேரம் ஊற வைத்த பின்னர் ஜாலியாக அனுபவிக்கவும்.

Views: - 0

0

0