வெயிலை சமாளிக்க ஜில் ஜில் ஃப்ரூட் கஸ்டர்ட்!!!

2 April 2021, 2:33 pm
Quick Shareகோடை வெப்பத்தை ஆக்கபூர்வமான முறையில் கையாள சிறந்த வழிகளில் ஒன்று, வீட்டில் எளிதாக தயாரிக்கக்கூடிய குளிர்ந்த இனிப்பு வகைகள் ஆகும். இதனை செய்வது ஒன்றும் அவ்வளவு கஷ்டம் இல்லை. எளிமையான முறையில் குறைவான பொருட்களைக் கொண்டே தயாரித்து விடலாம். இப்போது ஃப்ரூட் கஸ்டர்ட் எப்படி செய்வது என இந்த பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
1 தேக்கரண்டி – கஸ்டர்ட் பவுடர்
1/2 லிட்டர்- பால்
1 கரண்டி – ஸ்கிம்ட் பால் (skimmed milk)
நறுக்கிய மாம்பழ துண்டுகள் சில
சில பிஸ்தா பருப்பு
மாதுளை விதைகள்

முறை:
* ஒரு சிறிய பவுலில், பால், கஸ்டர்ட் பவுடர் ஆகிய இரண்டையும்  சேர்த்து நன்கு கலக்கவும். கலந்த பிறகு இதனை தனியாக வைக்கவும்.

* ஒரு அடி கனமான பாத்திரத்தில், ½ லிட்டர்  பால் எடுத்து அதில் 1 கரண்டி ஸ்கிம்ட் பால் சேர்க்கவும்.

* பால் பொங்கி வர வர நன்கு கிளறி கொண்டே இருங்கள்.

* இப்போது, ​​நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்த கஸ்டர்ட் பவுடர் மற்றும் பால் கலவையை சேர்க்கவும்.

* ஐந்து நிமிடங்கள் கிளறி, பால் கெட்டியாகும் வரை கொதிக்க வைக்கவும்.

* இப்போது, ​​அடுப்பை அணைத்து, இதனை குளிர விடவும்.

* இது நன்கு ஆறிய பின் நறுக்கிய மாம்பழம், பிஸ்தா, மாதுளை விதைகளை சேர்க்கவும்.

* கஸ்டர்டை ஒரு பரிமாறும் பவுல் அல்லது கிண்ணத்தில் மாற்றி மாதுளை விதைகள் மற்றும் பிஸ்தா கொண்டு அலங்கரிக்கவும்.

Views: -

0

0