இட்லியை இன்னும் ஆரோக்கியமானதாக மாற்ற கேரட் இட்லி ரெசிபி!!!

Author: Hemalatha Ramkumar
13 October 2021, 12:56 pm
Quick Share

தமிழ்நாட்டில் பெரும்பாலானவர்களி்ன் காலை உணவு இட்லி தான். இட்லி தானானு சாதாரணமாக நினைத்து விட வேண்டாம். இட்லி ஒரு சிறந்த காலை உணவு. ஆவி பறக்க பறக்க மல்லிகை பூ மாதிரி இருக்கும் இட்லியில் நான்கினை தட்டில் வைத்து கார சட்னி மற்றும் சாம்பார் தொட்டு சாப்பிடும் சுகமே தனி. ஆனால் தற்போது இந்த இட்லியைக் கூட வித்தியாசமாக செய்யலாம். அப்படி ஒரு வித்தியாசமான இட்லி தான் கேரட் இட்லி. இதனை எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி- 4 டம்ளர்
உளுந்து- ஒரு டம்ளர்
கேரட்- 1
எண்ணெய்- இரண்டு தேக்கரண்டி
சீரகம்- 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை- ஒரு கொத்து
உப்பு- தேவையான அளவு

செய்முறை:
*முதலில் இட்லிக்கு மாவு அரைக்க அரிசி மற்றும் உளுந்து ஆகிய இரண்டையும் நன்றாக சுத்தம் செய்து கழுவி நான்கு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

*அரிசி மற்றும் உளுந்து ஊறியதும் அவற்றை கிரைண்டரில் போட்டு இட்லி மாவு பதத்திற்கு அரைத்து எடுத்து வைக்கவும்.

*இட்லி மாவிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து ஒரு இரவு முழுவதும் அல்லது 9 மணி நேரம் புளிக்க வைக்கவும்.

*மாவு புளித்த பின் ஒரு கேரட்டை துருவிக் கொள்ளவும்.

*இப்போது அடுப்பில் ஒரு ஒரு கடாய் வைத்து அது சூடானதும் எண்ணெய் ஊற்றவும்.

*எண்ணெய் காய்ந்ததும் கறிவேப்பிலை, சீரகம் சேர்த்து தாளிக்கவும்.

*அடுத்து ஒரு கிண்ணத்தில் உங்களுக்கு தேவையான அளவு இட்லி மாவு எடுத்து அதில் துருவிய கேரட், தாளிப்பு ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.

*நீங்கள் இட்லி தட்டில் எண்ணெய் தடவி நாம் தயார் செய்த மாவை ஊற்றி வைக்கவும்.

*இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.

*தண்ணீர் கொதி வந்தவுடன் இட்லி தட்டை வைத்து மூடி போட்டு 6 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும்.

*இட்லி வெந்தவுடன் சூடாக பரிமாறவும். இதனுடன் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி சூப்பராக இருக்கும்.

Views: - 91

0

0

Leave a Reply