இந்த மாதிரி புதினா பராத்தா செய்தால் பத்து கூட சாப்பிடலாம் போலவே!!!

Author: Hemalatha Ramkumar
11 October 2021, 10:30 am
Quick Share

உடல் எடையை குறைக்கும் பொருட்டு பலர் சப்பாத்தி சாப்பாத்தி சாப்பிட ஆரம்பித்துள்ளனர். ஆனால் தினமும் சப்பாத்தி சாப்பிட்டால் அலுத்து போய்விடும் அல்லவா… சப்பாத்தியையே வித விதமாக செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் இன்று நாம் புதினா பராத்தா எப்படி செய்வது என பார்க்கலாம். இது சுவையாக இருப்பதோடு மட்டும் அல்லாமல் ஆரோக்கியமானதும் கூட. இப்போது புதினா பராத்தா எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு- 2 கப்
மிளகாய் தூள்- 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி
சாட் மசாலா- 1/2 தேக்கரண்டி
சீரகம்- 1/2 தேக்கரண்டி
புதினா- ஒரு சின்ன கட்டு
எண்ணெய்
நெய்
உப்பு- தேவையான அளவு

செய்முறை:
*ஒரு அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், பொடியாக நறுக்கிய புதினா இலைகள், சாட் மசாலா, சீரகம் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்க்கவும்.

*அனைத்து பொருட்களையும் நன்கு கலந்து விடவும்.

*இந்த கலவையில் மாவுக்கு தேவையான அளவு தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி பிசையவும்.

*சிறிதளவு எண்ணெய் சேர்த்து பத்து நிமிடங்களுக்கு நன்கு பிசைந்து கொள்ளவும்.

*பிசைந்த இந்த மாவை முப்பது நிமிடங்கள் ஊற விடவும்.

*பின்னர் சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.

*ஒவ்வொரு உருண்டையையும் எடுத்து மாவு தூவி சப்பாத்தி கட்டையால் விரிக்கவும்.

*அடுத்து தோசைக்கல்லை அடுப்பில் வைத்து ஒவ்வொரு பராத்தாவாக போட்டு நெய் ஊற்றி சுட்டு எடுத்தால் சுவையான புதினா பராத்தா தயார்.

Views: - 72

0

0

Leave a Reply