வாயில் போட்ட உடனே கரையும் சுவையான நெய் மைசூர் பாக் ரெசிபி!!!

Author: Hemalatha Ramkumar
2 October 2021, 12:31 pm
Quick Share

நெய்யில் செய்யும் தின்பண்டங்கள் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். கம கமவென வாசனை மற்றும் சுவையுடன் கலந்த நெய்யால் ஆன இனிப்பு வகைகள் பார்ததவுடனே சாப்பிடத் தூண்டும் அளவிற்கு இருக்கும். அந்த வகையில் வாயில் போட்ட உடனே கரையும் நெய் மைசூர் பாக்
எப்படி செய்வது என இப்போது நாம் பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:
கடலை மாவு- 1கப்
நெய்-150 ml
சர்க்கரை- 1கப்

செய்முறை:
*நெய் மைசூர் பாக் செய்வதற்கு முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு தேக்கரண்டி நெய் விடவும்.

*நெய் உருகியதும் அதில் கடலை மாவு சேர்த்து வறுக்கவும்.

*கடலை மாவு பொன்னிறமாக வறுப்பட்டவுடன் கட்டிகள் எதுவும் இல்லாத வகையில் அதனை சல்லடையில் போட்டு சலித்து எடுக்கவும்.

*சலித்த கடலை மாவுடன் நெய் சேர்த்து அது கிரீமியாக வரும் வரை நன்கு கிளறவும்.

*இது ஒரு புறம் இருக்க மற்றொரு அடுப்பில் தண்ணீர் ஊற்றி சர்க்கரை சேர்த்து பாகு தயாரிக்கவும்.

*சர்க்கரை பாகு தயாரானதும் அதில் கடலை மாவினை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டிகள் இல்லாதவாறு கிளறி கொண்டே இருக்கவும்.

*ஒரு டிரேயில் நெய் தடவி ரெடியாக வைத்துக் கொள்ளுங்கள்.

*கடலை மாவு மற்றும் நெய் ஒன்றாக திரண்டு வந்தவுடன் நெய் தடவிய டிரேயில் கொட்டி பரப்பி விடவும்.

*இது நன்கு ஆறிய பின் துண்டுகளாக நறுக்கி குடும்பத்தினரோடு சாப்பிட்டு என்ஜாய் பண்ணுங்க.

Views: - 578

0

0