உங்கள் வீட்டு குட்டீஸூக்கு இன்றே செய்து கொடுங்கள் ருசியான பன்னீர் ரோல்!!!

26 February 2021, 7:32 pm
Quick Share

பன்னீர் ரோல் ஒரு சுவையான ஸ்நாக்ஸ் ஆகும். இது மிகவும் காரசாரமாக இருக்கும். பன்னீர் ரோல் இந்தியாவின் புகழ்பெற்ற தெரு உணவாகும். இந்த பன்னீர் ரோலை கடைகளில் தான் வாங்கி சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை.  இதனை மாலை நேரத்தில்  குழந்தைகளுக்கு வீட்டிலே செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். 

செய்முறை: 

*தோராயமாக 500 கிராம் பன்னீரை சிறிய க்யூப்ஸாக நறுக்கி ஒரு கிண்ணத்தில் வையுங்கள். 

*இதனோடு சிறிதளவு  தயிர், 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள், 1 தேக்கரண்டி உப்பு, 1 தேக்கரண்டி கரம் மசாலா, ¼ தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி  நசுக்கிய பூண்டு, ½ தேக்கரண்டி இஞ்சி விழுது சேர்க்கவும். இந்த மசாலாப் பொருட்களுடன் பன்னீரை ஊற வையுங்கள்.

*பன்னீர் ரோலை நிரப்புவதற்கு, ஒரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் சூடானதும், நறுக்கிய வெங்காயம், பச்சை குடை மிளகாய், மஞ்சள் குடை மிளகாய், சிவப்பு குடை மிளகாய்  ஆகியவற்றைச் சேர்க்கவும். 

*ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து காய்கறிகளை ஒரு நிமிடம் வதக்கவும். 

*இப்போது பன்னீர் சேர்த்து கிளறவும். இதை 5 நிமிடங்கள் சமைக்கவும்.

*புதினா மற்றும் கொத்தமல்லி சட்னிக்கு, ½ கப் கொத்தமல்லி இலைகள், 2 பல் பூண்டு, ½ கப் புதினா இலைகள், 4-5 பச்சை மிளகாய், உப்பு, சர்க்கரை, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சிறிது தண்ணீருடன் சேர்த்து அரைக்கவும்.

*வெளிப்புற ஷீட் தயார் செய்ய வழக்கமாக சப்பாத்தி செய்வதற்கு கோதுமை மாவு பிசைவதை போல பிசைந்து கொள்ளவும். மாவை பகுதிகளாக பிரித்து மெலிசாக விரித்து கொள்ளுங்கள்.  

*இதனை எண்ணெயில் போட்டு இருபுறமும் பொரிந்தவுடன் வெளியே எடுத்து விடவும்.

*இந்த ஷீட் மீது நாம்  தயாரித்து  சட்னியில் இருந்து 4 தேக்கரண்டி  நிரப்பவும். அடுத்து பன்னீர் கலவையை பரப்பி, உருட்டவும். இதனை ஊறுகாய் மற்றும்  வெங்காயத்துடன் பரிமாறவும்.

Views: - 23

0

0