வித்தியாசமான முறையில் மலாய் கோவா… இன்றைக்கே டிரை பண்ணி பாருங்க!!!

14 January 2021, 9:13 am
Recipe - Updatenews360
Quick Share

பொதுவாக பால்கோவா என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் ஒரு சிலருக்கு பால் பிடிக்காது. பால் பிடிக்காதவர்களும் கோவா சாப்பிட விரும்பினால் அவர்களுக்கு ஏற்ற ஒரு ரெசிபி தான் இன்று நாம் பார்க்க போகிறோம். இப்போது சோயா பன்னீர் கொண்டு மலாய் கோவா எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:  

1 கப் – முந்திரி பருப்பு 

4 தேக்கரண்டி- உலர்ந்த பேரிச்சம் பழத்தூள் 

3 தேக்கரண்டி- காய்ந்த  தேங்காய்  

1/4 தேக்கரண்டி – பச்சை ஏலக்காய் தூள் 

ஒரு சிட்டிகை – கல் உப்பு 

30 கிராம் – சோயா பன்னீர்

3 தேக்கரண்டி – பேரிச்சம் பழம் 

முறை 

* மிக்சியில் முந்திரிப் பருப்பைச் சேர்த்து நன்றாகப் பொடியாக அரைக்கவும். ஒரு கிண்ணத்தில் இதனை தனியாக வைக்கவும். 

* இதனோடு பேரிச்சம் பழத்தூள், காய்ந்த  தேங்காய், பச்சை ஏலக்காய் தூள் மற்றும் சிறிது கல் உப்பு சேர்க்கவும். அனைத்து பொருட்களையும் நன்றாக கலக்கவும். 

*இப்போது சோயா பன்னீரை தூளாக்கி  சேர்க்கவும். இதைத் தொடர்ந்து பேரிச்சம் பழங்களையும் சேர்க்கவும்.  உங்கள் கைகளால் பொருட்கள் அனைத்தையும் கலந்து மாவை பிசையுங்கள். 

* மாவை பிசைந்த பிறகு அதிலிருந்து சிறிதளவு எடுத்து உங்கள் உள்ளங்கைகளால் உருட்டி ஒரு உருண்டையை  உருவாக்குங்கள். பிறகு அதனை தட்டி கொள்ளவும்.   இதன் மீது பிஸ்தா வைத்து அலங்கரிக்கவும். 

*டேஸ்டான மலாய் கோவா தயார்.

Views: - 7

0

0