குட்டி குட்டி மசாலா ஊத்தப்பம் செய்யத் தயாரா???
4 August 2020, 2:00 pmவித்தியாசமான மற்றும் சுவையான ஒன்றைக் கொண்டு வாரத்தைத் தொடங்குவது போல் எதுவும் இல்லை. எனவே இன்று உங்கள் வீட்டில் வித்தியாசமான முறையில் குட்டி குட்டி ஊத்தப்பம் செய்ய தயாரா??? இதனை குழந்தைகள் ஆசையுடன் உண்பார்கள். மேலும் நிறைய காய்கறிகளைச் சேர்ப்பதன் மூலம் இதனை ஆரோக்கியமான காலை உணவாக மாற்றலாம்.
தேவையான பொருட்கள்:
ஊத்தப்பம் மாவு- 2 கப்
உப்பு- தேவையான அளவு
சாம்பார் மசாலா- 2 தேக்கரண்டி
துருவிய கேரட்- 1/4 கப்
தக்காளி- 2
வெங்காயம்- 2
கொத்துமல்லி தழை- சிறிதளவு
செய்முறை:
* ஊத்தப்பம் மாவை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
* தோசை கல்லை சூடாக்கவும்.
* ஒரு குழி கரண்டியில் மாவை எடுத்து கல்லில் வட்ட வடிவத்தில் பரப்பவும்.
* இப்போது அடுப்பு தீயை அதிகரிக்கவும்.
* துருவிய கேரட், பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி இலைகளை ஊத்தப்பம் மீது தூவவும்.
* சுற்றிலும் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி கொள்ளலாம்.
* சாம்பார் மசாலா மற்றும் ஒரு சிட்டிகை உப்பு தூவவும்.
* ஊத்தப்பத்தின் உள்ளே காய்கறிகளை மெதுவாக அழுத்துங்கள்.
* ஊத்தப்பத்தில் உருவாகும் சிறிய துளைகள் அவை நன்றாக சமைத்ததற்கான அறிகுறியாகும்.
* கீழே தங்க மஞ்சள் நிறமாகும்போது, மினி ஊத்தப்பத்தை புரட்டி மறுபுறம் சமைக்கவும்.
* தயாரானதும், தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.