இன்று ஐபிஎல் போட்டியை இந்த உருளைக்கிழங்கு சிப்ஸ் உடன் கண்டு மகிழுங்கள்!!!

22 September 2020, 9:15 am
Quick Share

ஆறு மாதங்கள் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு ஐபிஎல் தொடர் ஆரம்பமாகி உள்ளது. இனி ஒவ்வொரு மாலையும் நாம் அதற்காக எதிர்நோக்க வேண்டும். ஆகவே, உற்சாகத்தை அதிகரிக்கும் மற்றும் நீண்ட நாள் வேலைக்குப் பிறகு (வீட்டிலிருந்து) ஐபிஎல் பார்க்கும் அனுபவத்தை இன்னும் சிறப்பாக மாற்ற  உருளைக்கிழங்கு சிற்றுண்டியுடன் ஏன்  மகிழ்ச்சியாகவும் செய்யக்கூடாது?

என்ன தான் ஏராளமான தின்பண்டங்கள் இருந்தாலும்  ​​உருளைக்கிழங்கு சிப்ஸ்களை விட சிறந்தது எதுவுமில்லை! இது ஒரு நொடியில் தயாரிக்கப்படும் ஒரு ஸ்னாக்ஸ். மேலும் இது அதிக எண்ணெயைப் பயன்படுத்துவதில்லை.

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு

எண்ணெய்

உப்பு, சுவைக்க

சிவப்பு மிளகாய் தூள்

முறை:

* முக்கால் பாகம் வேகவைத்த உருளைக்கிழங்குகளை வட்ட வடிவில் வெட்டி எடுத்து கொள்ளுங்கள். பிறகு அதனை ஒரு சாண்ட்விச் மேக்கரில் வைத்து எண்ணெய் ஊற்றி கிரில் செய்து எடுங்கள். சாண்ட்விச் மேக்கர் இல்லாதவர்கள் தோசைக்கல்லை பயன்படுத்தி கொள்ளலாம்.  

* இருபுறமும் குறைந்தது ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் வரை வேக வேண்டும். 

* உப்பு மற்றும் சிவப்பு மிளகாய் தூள் தூவவும். 

* உங்கள் விருப்பப்படி தந்தூரி மயோ அல்லது எந்த சீஸ் டிப் / மயோ கூட பயன்படுத்தி கொள்ளலாம்..

* புதினா, கொத்தமல்லி இலைகள் கொண்டு அலங்கரிக்கவும்.