வெறும் இருபது நிமிடங்களில் காரசாரமான மதிய உணவு தயார்: உருளைக்கிழங்கு சாதம்!!!

By: Udayaraman
5 October 2020, 8:41 pm
Quick Share

இன்றைக்கு நாம் பார்க்க இருப்பது ஒரு வெரைட்டி சாதம். இது செய்வதற்கு எளிதாக இருந்தாலும் சுவை அட்டகாசமாக இருக்கும். இருபதே நிமிடத்தில் இந்த உருளைக்கிழங்கு சாதத்தை செய்து விடலாம். எங்காவது வெளியில் செல்லும் போது அல்லது விரைவாக மதிய உணவு சமைக்க வேண்டும் என்ற சூழ்நிலையில் இதனை நீங்கள் செய்யலாம். 

தேவையான பொருட்கள்:

3- தேக்கரண்டி எண்ணெய்

1/4 தேக்கரண்டி- கடுகு

1/2 தேக்கரண்டி- சீரகம்

1/2 தேக்கரண்டி- பெருஞ்சீரகம் விதைகள்

1- பிரியாணி இலை   

2- இலவங்கப்பட்டை குச்சி 

2- ஏலக்காய்

2- கிராம்பு

2 பல்- பூண்டு

1 அங்குலம்- இஞ்சி

2- உலர்ந்த சிவப்பு மிளகாய்

1- பெரிய வெங்காயம்

3- உருளைக்கிழங்கு

1/8 தேக்கரண்டி- மஞ்சள் தூள்

1 தேக்கரண்டி- கரம் மசாலா

1 தேக்கரண்டி- மிளகாய் தூள்

2 கப்- சமைத்த சாதம்

தேவையான அளவு உப்பு

கொத்துமல்லி தழை சிறிதளவு

செய்முறை:

ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி கடுகு, சீரகம், பெருஞ்சீரகம், இலவங்கப்பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை, கிராம்பு, இஞ்சி பூண்டு விழுது, உலர்ந்த சிவப்பு மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலக்கவும்.

பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து ஒரு நிமிடம் சமைக்கவும். நறுக்கிய உருளைக்கிழங்கைச் சேர்க்கவும். உருளைக்கிழங்கு முழுமையாக சமைக்கப்படும் வரை காத்திருக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.  

இப்போது மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கலந்து, ஓரிரு நிமிடங்கள் சமைக்கவும். பின்னர் சமைத்த சாதம், கொத்தமல்லி இலைகளை சேர்த்து நன்கு கலக்கவும். நம் சுவையான உருளைக்கிழங்கு சாதம் இப்போது பரிமாற தயாராக உள்ளது.

Views: - 42

0

0