வெறும் அரை மணி நேரத்தில் அட்டகாசமான மினி சாக்லேட் கேக் தயார்!!!
14 September 2020, 9:24 pmஇந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது அனைவருக்கும் மிகவும் விருப்பமான மினி சாக்லேட் கேக். இது பேக்கரியில் வாங்கப்படும் கேக் போலவே சுவையாக இருக்கும். நிச்சயமாக உங்கள் வீட்டில் இதனை முயற்சி செய்து பாருங்கள்….
தேவையான பொருட்கள்:
மைதா மாவு- 1/2 கப்
கோகோ பவுடர்- 1/4 கப்
பேக்கிங் பவுடர்- 1 தேக்கரண்டி
பேக்கிங் சோடா- 1/4 தேக்கரண்டி
சர்க்கரை- 1/2 கப்
பொடித்த சர்க்கரை- 3/4 கப்
உப்பு- ஒரு சிட்டிகை
எண்ணெய்- 1/4 கப்
பால்- 1/4 லிட்டர்
வெண்ணிலா எசன்ஸ்- 1 தேக்கரண்டி
வெண்ணெய்- 100 கிராம்
செய்முறை:
மினி சாக்லேட் கேக் செய்ய முதலில் ஒரு சல்லடையில் மைதா மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா ஆகியவற்றை சலித்து கொள்ளுங்கள். இந்த மாவை ஒரு அகலமான பாத்திரத்தில் கொட்டி கூடவே உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்.
அடுத்ததாக காய்ச்சி ஆற வைத்த பால், எண்ணெய், உப்பு சேர்க்காத வெண்ணெய் மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து எந்த வித கட்டியும் இல்லாமல் பிசைந்து கொள்ளவும். கேக்கை பேக் செய்யப் போகும் கப் எல்லாவற்றிலும் வெண்ணெயை தடவுங்கள். பிறகு அனைத்து கப் யிலும் கேக் கலவையை முக்கால் அளவு ஊற்றவும்.
இப்போது ஓவனை 180°C யில் பத்து நிமிடங்கள் சூடாக்கி, கப் அனைத்தையும் வைக்கவும். இதே வெப்பத்தில் கேக் 20 நிமிடங்கள் பேக் ஆகட்டும். இந்த நேரத்தில் வேறொரு பாத்திரத்தில் பொடித்த சர்க்கரை, வெண்ணெய், வெண்ணிலா எசன்ஸ் மற்றும் இரண்டு தேக்கரண்டி பால் சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும்.
கேக் பேக் ஆன பின் அதனை ஆற விட்டு நாம் செய்து வைத்த கிரீமை மேலே சேர்க்கவும். கடைசியில் சாக்லேட்டை துருவி மேலே சேர்த்து கொள்ளலாம்.
0
0