கொங்குநாட்டு ருசியில் வித்தியாசமான சேனைக்கிழங்கு மசாலா!!!

16 November 2020, 9:05 am
Quick Share

பெரும்பாலானோர் சேனைக்கிழங்கை எண்ணெயில் வறுத்து தான் சாப்பிடுவர். அதனால் டயட்டில் இருப்பவர்கள் இதனை தவிர்த்து விடுவர். இன்று நாம் பார்க்க இருக்கும் ரெசிபியில்  சேனைக்கிழங்கோடு மசாலா சேர்த்து வித்தியாசமான சுவையில் செய்யப் போகிறோம். எந்த வித பயமும் இல்லாமல் அனைவரும் இதை சாப்பிடலாம். 

தேவையான பொருட்கள்:

சேனைக்கிழங்கு- 300 கிராம்

மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி

கடுகு- 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை- ஒரு கொத்து 

உப்பு- சுவைக்கு ஏற்ப

எண்ணெய்- தேவையான அளவு

பட்டை- 1

கிராம்பு- 2

பூண்டு- 4 பற்கள்

இஞ்சி- ஒரு துண்டு

கசகசா- 2 தேக்கரண்டி

தேங்காய் எண்ணெய்- 2 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய்- 2

செய்முறை: 

முதலில் சேனைக்கிழங்கை தோல் சீவி சுத்தம் செய்து குக்கரில் போட்டு கொள்ளுங்கள். கிழங்கு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றவும். கூடவே தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 2 விசில் விடவும். 

இப்போது கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். ஒரு கொத்து கறிவேப்பிலை போட்டு பொரித்து எடுத்து கொள்ளவும். அடுத்ததாக பட்டை, கிராம்பு சேர்க்கவும். பிறகு இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், கசகசா மற்றும் தேங்காய் சேர்த்து வதக்கவும். 

வதக்கிய இந்த மசாலா பொருட்களை நைசாக அரைத்து கொள்ளவும். இப்போது மீண்டும் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் கறிவேப்பிலை மற்றும் அரைத்து வைத்த மசாலாவை சேர்க்கவும். அடுத்து வேக வைத்த 

சேனைக்கிழங்கை போடவும். நன்றாக கலந்தபின் உப்பு சரியாக உள்ளதா என பார்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கிய பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள். வித்தியாசமான சேனைக்கிழங்கு மசாலா தயார்.

Views: - 25

0

0