உங்கள் தேநீர் நேரத்தை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக்க மசாலா சுண்டல்…!!!

11 September 2020, 11:00 am
Quick Share

மாலை நேர தேநீருடன் சேர்த்து சூடாக எதையாவது சாப்பிடுவது யாருக்கு தான் பிடிக்காது? காரசாரமான மசாலா சுண்டல் அல்லது மசாலா சான்னாவை சில பொருட்களுடன் வீட்டிலேயே எளிதில் தயாரிக்கலாம். எளிய முறையில் விரைவாக செய்து சந்தோஷமாக மகிழ்ந்து சாப்பிட மசாலா சுண்டல் எவ்வாறு செய்வது என பாருங்கள். 

தேவையான பொருட்கள்:

1 கப்- கொண்டைக்கடலை

1½ தேக்கரண்டி – ஆலிவ் எண்ணெய் அல்லது வேறு எண்ணெய் 

1/4 தேக்கரண்டி- வறுத்த சீரகத்தூள்

1/2 தேக்கரண்டி- சிவப்பு மிளகாய் தூள்

சுவைக்கு ஏற்ப உப்பு

(தேவைப்பட்டால் சில்லி ஃபிளேக்ஸ்)

செய்முறை:

* ஒரு பாத்திரத்தை எடுத்து, பாதி அளவு வேக வைத்த கொண்டைக்கடலை, ஆலிவ் எண்ணெய், வறுத்த சீரகத்தூள், சிவப்பு மிளகாய் தூள், உப்பு மற்றும் சில்லி ஃபிளேக்ஸை சேர்த்து நன்கு கலக்கவும்.

நீங்கள் பீட்ஸா சுவையூட்டிகள் மற்றும் வெங்காயம், பூண்டு தூள் ஆகியவற்றையும்  சேர்க்கலாம்.

* அதை ஒரு பேக்கிங் தட்டில் மாற்றி 25 நிமிடங்கள் ஓவனில் வைக்கவும். (10 நிமிடங்களுக்கு 190°F க்கு அடுப்பை முன்கூட்டியே சூடாக்கவும்).

* அடுப்பில் சமைக்க, அதை வாணலியில் போட்டு மெதுவான தீயில் 20-25 நிமிடங்கள் தொடர்ந்து கிளறவும்.

* சில நிமிடங்களுக்குப் பிறகு சரிபார்க்கவும். பின்னர் அதை லேசாக கிளறி இரண்டு நிமிடங்கள் அப்படியே விடவும்.

உதவிக்குறிப்புகள்:

இந்த சிற்றுண்டியை குறைந்தபட்சம் ஆறு நாட்களுக்கு காற்று உள்ளே புகாத ஒரு பாட்டிலில் சேமிக்கலாம்.

Views: - 0

0

0