பீட்ரூட் வைத்து இப்படி ஒரு அசத்தலான சட்னியா… நம்பவே முடியலப்பா!!!

8 February 2021, 10:26 am
Beetroot Chutney -Updatenews360
Quick Share

பெரும்பாலான சமையல் அறைகளில் பீட்ரூட் தவிர்க்கப்படுகிறது. ஆனால் பீட்ரூட்டில் உள்ள சத்துக்கள் பற்றி அறிந்தால் நிச்சயமாக இப்படி செய்ய மாட்டீர்கள். பீட்ரூட் பெரும்பாலும் சைட் டிஷ் செய்ய தான் பயன்படுத்தப்படுகிறது. இன்று நாம் பீட்ரூட் வைத்து ஒரு வித்தியாசமான ருசியில் சட்னி எப்படி செய்வது என பார்க்கலாம்.         

இந்த சட்னி கொஞ்சம் இனிப்பாகவும் புளிப்பாகவும் இருக்கும். இதனை ஈசியாக செய்து விடலாம். 

தேவையான பொருட்கள்:

பீட்ரூட் – 1

எண்ணெய் – 1 & ½ தேக்கரண்டி

சீரகம் – 1/2 தேக்கரண்டி

பெருங்காய பொடி – ஒரு சிட்டிகை

உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி

கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி

பூண்டு- 5-6 பல்

உலர்ந்த சிவப்பு மிளகாய் – 5-6

புளி கரைசல் – 1 தேக்கரண்டி

கடுகு விதைகள் – 1 தேக்கரண்டி

உப்பு- சுவைக்கு ஏற்ப

செய்முறை:

*பீட்ரூட் சட்னி செய்வதற்கு முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் புளியை  போடவும். இதனோடு 2 தேக்கரண்டி  சூடான நீர் ஊற்றி புளியை ஊற வைக்கவும்.

*ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெயை சூடாக்கி, அதில் சீரகம் சேர்க்கவும். 

*அவை நிறம் மாறி வெடிக்க   தொடங்கும் போது, ​​உளுத்தம்பருப்பு மற்றும் கடலைப் பருப்பைச் சேர்க்கவும். 

*அவை பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பின்னர் ஒரு சிட்டிகை பெருங்காயப் பொடியை சேர்க்கவும். 

*இதைத் தொடர்ந்து பூண்டு சேர்க்கவும்.

*பூண்டு பொன்னிறமாக மாறும்போது, ​​உலர்ந்த சிவப்பு மிளகாயை சேர்க்கவும். 

*மிளகாய் பலூன் போல பெரிதாக  ஆரம்பித்ததும், தோல் சீவி அரைத்த பீட்ரூட்டைச் சேர்க்கவும். 

*இது வேகும்  வரை சமைக்கவும். 

*இதற்கு கிட்டத்தட்ட  10 நிமிடங்கள் ஆகும். 

*இது சீக்கிரமாக வேக ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும்.

*பீட்ரூட் வெந்தவுடன், அடுப்பை அணைத்து கலவையை ஆர வைக்கவும். 

*பின்னர், பீட்ரூட் கலவையில் புளி கரைசலை சேர்த்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து  அரைக்கவும். 

*நீங்கள் விரும்பும் அளவுக்கு அதனை அரைத்து கொள்ளவும். தேவையான அளவு தண்ணீரைச் சேர்க்கவும்.

*கடைசியாக, உப்பு சேர்த்து (தேவைக்கேற்ப) கடுகு விதைகளை தாளித்து சேர்க்கவும்.

*சாதம், சப்பாத்தி, தோசை மற்றும் இட்லியுடன் இதனை பரிமாறவும்.

Views: - 0

0

0