சப்பாத்திக்கு செம சூப்பரான சைட் டிஷ்… வெங்காய சப்ஜி!!!

5 February 2021, 8:17 pm
Quick Share

சப்பாத்திக்கு எப்போதும் உருளைக்கிழங்கு மசாலா, சன்னா மசாலா என செய்யாமல் ஒரு முறை இந்த வெங்காய சப்ஜியை முயற்சி செய்து பாருங்கள். இதனை மூன்றே பொருட்கள் கொண்டு சுலபமாக செய்து விடலாம். இது சப்பாத்தி, பூரி, வெள்ளை சாதம் ஆகியவற்றிற்கு சூப்பர் காம்பினேஷனாக இருக்கும். இப்போது இந்த வெங்காய சப்ஜி எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

நறுக்கிய வெங்காயம் – 3 

பச்சை மிளகாய் – 4-5

எண்ணெய் – 3 தேக்கரண்டி

இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு தேக்கரண்டி

தக்காளி – 2 

மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி 

உப்பு – சுவைக்கேற்ப

துருவிய தேங்காய் – அரை கப் 

சோம்பு – ஒரு தேக்கரண்டி

செய்முறை:

*வெங்காய சப்ஜி செய்வதற்கு முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய் மற்றும் சோம்பு சேர்த்து கொள்ளவும். இதனோடு சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்டாக அரைக்கவும்.

*ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். 

*வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.

*இப்போது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

*இஞ்சி பூண்டின் பச்சை வாசனை போனதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

*அடுத்து அரைத்து வைத்த தேங்காய் விழுது மற்றும் சிறிதளவு தண்ணீர்  சேர்த்து இரண்டு நிமிடங்கள் மட்டும் கொதிக்க விடவும்.

*அவ்வளவு தான்… நமது ருசியான வெங்காய சப்ஜி தயார். உங்களிடம் தக்காளி இல்லாத பட்சத்தில் அதற்கு பதிலாக எலுமிச்சை சாற்றை சேர்த்து கொள்ளலாம். 

*இதன் சுவையை மேலும் கூட்ட தேங்காய் அரைக்கும் போது முந்திரி பருப்பு சேர்த்து அரைத்தால் சுவை அட்டகாசமாக இருக்கும்.

Views: - 1

0

0