அப்பப்பா…என்ன ஒரு ருசி… இனிப்பு உருளைக்கிழங்கு சிப்ஸ் ரெசிபி!!!

29 April 2021, 9:37 pm
Quick Share

நீங்கள் ஆரோக்கியமாக  சாப்பிட விரும்பும் ஒருவர் என்றால், ஆரோக்கியமான மற்றும் சுவையான ஒரு சிற்றுண்டியைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமானதாக இருக்கும்.  

உங்களுக்கான சரியான ஸ்நாக்ஸ் இனிப்பு உருளைக்கிழங்கு சிப்ஸ். இது சுவையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பல ஆரோக்கிய,  நன்மைகளையும் கொண்டுள்ளது.

இனிப்பு உருளைக்கிழங்கு நார்ச்சத்தின் மிகவும் வளமான ஒரு மூலமாகும். இது உங்கள் குடல் ஆரோக்கியத்தை கட்டுக்குள் வைத்திருக்கும். மேலும் இனிப்பு உருளைக்கிழங்கில் ஆரோக்கியமான அளவு சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. இது உங்களுக்கு  உடற்பயிற்சிக்கு முன்பு  உடனடி ஆற்றலை வழங்கும்.

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்த, இனிப்பு உருளைக்கிழங்கு உங்கள் செல்கள் சேதத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களின் செயல்பாட்டிலிருந்து உங்களைப் பாதுகாக்கும். இதனால் பல்வேறு நோய்கள் தடுக்கப்படும். அதிக அளவு பீட்டா கரோட்டின் வைட்டமின் A ஆக மாற்றப்படுகிறது. இது உங்கள் பார்வையை  முடிந்தவரை வலுவாக இருப்பதை உறுதி செய்கிறது.

தேவையான பொருட்கள்:

-4 இனிப்பு உருளைக்கிழங்கு  

-4 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்

-1 தேக்கரண்டி கருப்பு மிளகு

-1 தேக்கரண்டி ஆர்கனோ

-1 தேக்கரண்டி சில்லி ஃபிளேக்ஸ் 

-உப்பு சுவைக்கு ஏற்ப

செய்முறை:

* முதலில் இனிப்பு உருளைக்கிழங்கை நன்கு  கழுவவும். பின்னர், அவற்றை சிப்ஸ் போடுவதற்கு ஏற்றவாறு  நறுக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் ஆலிவ் எண்ணெய், கருப்பு மிளகு, ஆர்கனோ மற்றும் சில்லி ஃப்ளேக்ஸை சேர்க்கவும். பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக கலக்கவும். இப்போது உப்பு சேர்க்க வேண்டாம். ஏனெனில் இது இனிப்பு உருளைக்கிழங்கின் சுவையை கெடுத்துவிடும்.

* இந்த கிண்ணத்தில் நறுக்கிய இனிப்பு உருளைக்கிழங்கை  சேர்க்கவும்.

* ஓவனை 200 ° C க்கு முன்கூட்டியே சூடாக்கவும்.

* உருளைக்கிழங்கை அடுப்பில் வைத்து 30 முதல் 40 நிமிடங்கள் வேக வைக்கவும்.

* முழுமையாக வெந்ததும், அதன் மீது சிறிது உப்பு தூவவும். 

* அவ்வளவு தான்… இனிப்பு உருளைக்கிழங்கு சிப்ஸ் இப்போது தயாராக உள்ளது.

Views: - 29

0

0

Leave a Reply