இந்த வெந்தயக்கீரை உருளைக்கிழங்கு வறுவலை ஒரு முறை டிரை பண்ணி பாருங்க!!!

25 January 2021, 9:32 pm
Quick Share

உருளைக்கிழங்கு பிடிக்காதவர்களையே பார்க்க முடியாது. தினமும் உருளைக்கிழங்கு செய்து கொடுத்தால் கூட சாப்பிடும் நபர்கள் உள்ளனர். பல விதமான உருளைக்கிழங்கு ரெசிபிகள் உண்டு. இன்று நாம் பார்க்க இருப்பது வெந்தய இலைகளை வைத்து ஒரு வித்தியாசமான உருளைக்கிழங்கு வறுவல் எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

4 கப் நறுக்கிய வெந்தயம் இலைகள் 

3- 4 நறுக்கிய உருளைக்கிழங்கு 

2 நறுக்கிய பச்சை மிளகாய் 

2 தேக்கரண்டி எண்ணெய்  

1 தேக்கரண்டி மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி  கொத்தமல்லி தூள் 

1 சிட்டிகை பெருங்காயத் தூள் 

உப்பு தேவைக்கேற்ப 

செய்முறை:

*முதலில் வெந்தய இலைகளையும்  நீராவியில் வைத்து 3-4 நிமிடங்கள் வேக வைக்கவும். 

*இப்போது இலைகளை  தண்ணீரில் நன்றாக கழுவி கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி இலைகளை ஐந்து நிமிடங்கள் அதில் ஊற வையுங்கள். 

*உங்களுக்கு விருப்பம் இருந்தால்  கிண்ணத்தில் வினிகர் அல்லது பேக்கிங் சோடாவை சேர்க்கலாம். 

*இதற்கிடையில் உருளைக்கிழங்கை தோலுரித்து, நறுக்கி கொள்ளவும். 

*5 நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீரை வடிகட்டி, வெந்தய இலைகளை மீண்டும் ஒரு முறை அலசவும். 

*இதற்குப் பிறகு, வெந்தய இலைகளை பொடியாக  நறுக்கவும். 

*ஒரு கடாயை அடுப்பில் வைத்து இரண்டு  தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து நடுத்தர தீயில் சூடாக்கவும். 

*ஒரு சிட்டிகை பெருங்காயத் தூள் மற்றும் நறுக்கிய மிளகாய் சேர்க்கவும். 

*இவற்றை நடுத்தர தீயில் ஒரு நிமிடம் வதக்கவும். நறுக்கிய உருளைக்கிழங்கைச் சேர்த்து, உருளைக்கிழங்கு  சற்று பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும். 

*இதற்குப் பிறகு நறுக்கிய வெந்தய இலைகளை சேர்த்து, மற்றொரு 3-4 நிமிடங்கள் நடுத்தர தீயில் வதக்கவும். 

*உப்பு மற்றும் கொத்தமல்லி தூள் சேர்த்து மஞ்சள் தூள் சேர்க்கவும். 

*அடுப்பை சிம்மில் வைத்து உருளைக்கிழங்கு மற்றும் இலைகள் சற்று மிருதுவாக மாறும் வரை  வதக்க வேண்டும். 

*இந்த கட்டத்தில் வெந்தய  இலைகள் உலர்ந்ததாகத் தோன்றும்.  

*கடாயை ஒரு மூடியால் மூடி, மேலும் 3-4 நிமிடங்கள் குறைந்த தீயில் சமைக்கவும்.  

*அவ்வளவு தான்… சுவையான வெந்தயக் கீரை உருளைக்கிழங்கு வறுவல் தயார்.

Views: - 0

0

0