ருசியான கம கம வெஜிடபிள் பிரியாணி!!!

5 August 2020, 12:00 pm
Quick Share

அட்டகாசமான வெஜிடபிள் பிரியாணியை வீட்டில் இருக்கக் கூடிய பொருட்களைக் கொண்டு இன்று நாம் செய்யப் போகிறோம். அதனை எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க….

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி- 200 கிராம்

கேரட்- 2

பீன்ஸ்- 10

உருளைக்கிழங்கு- 1

காளிஃபிளவர்- 1/8

பச்சை பட்டாணி- 1/2 கப்

பன்னீர்- 100 கிராம்

பச்சை மிளகாய்- 3

பெரிய வெங்காயம்- 2

பூண்டு-4 பல்

இஞ்சி- 1 பெரிய துண்டு

தயிர்- 1/2 கப்

பிரியாணி இலை- 2

பட்டை- 2

கிராம்பு- 6

ஏலக்காய்- 4

நட்சத்திர சோம்பு- 1

ஜாவித்திரி- 1

மிளகு- 1 தேக்கரண்டி

மல்லி- 1 தேக்கரண்டி

சீரகம்- 1 தேக்கரண்டி

சோம்பு- 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி

மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி

எண்ணெய்- தேவையான அளவு

நெய்- 2 தேக்கரண்டி

புதினா- ஒரு கையளவு

மல்லி இலை- சிறிதளவு

முந்திரி பருப்பு- 10

உப்பு- தேவையான அளவு

செய்முறை:

முதலில் பிரியாணி மசாலாவை அரைத்து கொள்ளலாம். ஒரு கடாயில்  ஒரு பிரியாணி இலை, ஒரு பட்டை, 2 ஏலக்காய், 3 கிராம்பு, ஒரு நட்சத்திர சோம்பு, ஒரு ஜாவித்திரி, ஒரு தேக்கரண்டி  மிளகு, ஒரு தேக்கரண்டி  சீரகம், 1/2 தேக்கரண்டி  சோம்பு போட்டு சூடு ஏறும் வரை வதக்கவும். பிறகு இதனை ஆற வைத்து இதனோடு 4 பல் பூண்டு, ஒரு பெரிய துண்டு இஞ்சி சேர்த்து  மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

அடுத்து வெங்காயத்தை ஃபிரை செய்து கொள்ளலாம். அதற்கு கடாயில் எண்ணெய் ஊற்றி இரண்டு பெரிய வெங்காயத்தை நீட்டு  வாக்கில் அரிந்து சேர்த்து கொள்ளவும். வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது காய்கறிகளை ஊற வைக்க ஒரு பாத்திரத்தில் 1/2 கப், 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், அரைத்து வைத்த மசாலா, நறுக்கிய இரண்டு கேரட், 1/8 காளிஃபிளவர், பத்து பீன்ஸ், ஒரு உருளைக்கிழங்கு, 1/2 கப் பச்சை பட்டாணி, 100 கிராம் பன்னீர் சேர்த்து கொள்ளவும்.

பன்னீர் சேர்க்கவில்லை என்றாலும் பரவாயில்லை. மேலும் 3 பச்சை மிளகாய், சிறிதளவு புதினா, கொத்தமல்லி தழை, கொஞ்சமாக ஃபிரை பண்ணி வைத்த வெங்காயம், ஒரு தேக்கரண்டி எண்ணெய், தேவையான அளவு உப்பு போட்டு கலந்து இதனை அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு தேக்கரண்டி  எண்ணெய் ஊற்றுங்கள். 

எண்ணெய் காய்ந்ததும் ஒரு பிரியாணி இலை, ஒரு பட்டை, இரண்டு ஏலக்காய், மூன்று கிராம்பு போட்டு அரிசி வேக வைக்க தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும். தண்ணீர் கொதி வந்ததும் ஒன்றில் இருந்து இரண்டு தேக்கரண்டி உப்பு போடவும்.  பிறகு ஒரு கப் பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி அரை மணி ஊற வைத்து சேர்க்கவும். 

அரிசியை ஊற வைத்ததால் சீக்கிரமே வெந்துவிடும். கொழையாமல் பார்த்து எடுத்து வடிகட்டி வையுங்கள். பிரியாணி செய்ய எல்லாம் தயார் நிலையில் உள்ளது. பிரியாணி செய்யப் போகும் பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி நாம் ஊற வைத்த காய்கறிகளை சேர்க்கவும். இதனோடு 1/4 கப் தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் இதனை 10 – 15 நிமிடங்கள் வேக வைக்கவும்.

பதினைந்து நிமிடங்கள் கழித்து காய்கறிகளில் இருந்து பாதியை எடுத்து தனியே வையுங்கள். மீதம் இருக்கக் கூடிய காய்கறிகளின் மேல் வேக வைத்த பாதி சாதத்தை சேர்க்கவும். சாதத்தின் மேலே எடுத்து வைத்த காய்கறிகளை போடவும். இதனோடு சிறிதளவு புதினா மற்றும் ஃபிரை செய்த வெங்காயத்தை தூவி விடவும். 

அடுத்த லேயரில் மீதம் இருக்கக் கூடிய சாதம், சிறிதளவு புதினா, மல்லி தழை, மீதும் இருக்கும் ஃபிரைட் வெங்காயம், கலருக்காக பாலில் ஊற வைத்த குங்கும பூ, வாசனைக்காக ஒரு தேக்கரண்டி நெய், நெய்யில் வறுத்து வைத்த பத்து முந்திரி பருப்பு, இரண்டு தேக்கரண்டி  தண்ணீர் ஊற்றி குறைவான சூட்டில் பத்து நிமிடங்கள் மூடி போட்டு வேக வைக்கவும்.

பத்து நிமிடங்கள் கழித்து லைட்டாக அரிசி உடையாதவாறு கிளறி சூடாக பரிமாறவும்…

Views: - 62

0

0