மீதமுள்ள கிச்சடியை மொறு மொறு காய்கறி வடையாக மாற்றி விடலாம்…!!!

16 September 2020, 8:53 pm
Quick Share

நேற்றிரவு மீதமுள்ள கிச்சடியை என்ன செய்வது என்று குழப்பமா? கவலை வேண்டாம்…அதனை ஒரு சுவையான வடையாக  ஆக்கி விடலாம். பருப்பு மற்றும் அரிசி ஆகியவற்றுடன்  தயாரிக்கப்படும் கிச்சடி வயிற்றிற்கு லேசானது மற்றும் மிகவும் சத்தான மற்றும் ஆரோக்கியமானது. அதனால்தான் பெரும்பாலான இந்திய சமையலறைகளில் பல சமையல் குறிப்புகளில் இது பெரும்பாலும் முதன்மையானது. இருப்பினும், முந்தைய இரவில் எஞ்சிய கிச்சடி இருந்தால், மறுநாள் அதனை அப்படியே சாப்பிட நீங்கள் விரும்பவில்லை என்றால், நீங்கள் சரியான இடத்தில் தான் உள்ளீர்கள். உங்கள் கிச்சடியை சரியான தேநீர் நேர சிற்றுண்டியாக மாற்றும் செய்முறை இங்கே உள்ளது.

தேவையான பொருட்கள்:

2 கப் – கிச்சடி 

1 – பச்சை மிளகாய், நறுக்கியது

1 தேக்கரண்டி – கொத்தமல்லி, நறுக்கியது

2 தேக்கரண்டி – ரொட்டி துண்டுகள்

1½ தேக்கரண்டி – வேகவைத்து மற்றும் பிசைந்த உருளைக்கிழங்கு, 

2 தேக்கரண்டி – வெங்காயம், நறுக்கியது

½ தேக்கரண்டி – இஞ்சி, நறுக்கியது

2 தேக்கரண்டி – சீஸ்

உப்பு சுவைக்க

எண்ணெய் – வறுக்க தேவையான அளவு

செய்முறை:

* ஒரு பாத்திரத்தில், ரொட்டி துண்டுகள் மற்றும் எண்ணெய் தவிர அனைத்து பொருட்களையும் கலக்கவும்.

* அதை சிறிய அளவு பந்துகளாக வடிவமைக்கவும். ரொட்டி துண்டுகளை தூளாக்கி கொள்ளுங்கள். உருண்டைகள்  ஒவ்வொன்றையும் உலர்ந்த ரொட்டி தூள் மீது உருட்டவும். 

* குறைந்தது 30 நிமிடங்களுக்கு அவற்றை குளிரூட்டவும்.

* கடாயில் எண்ணெயை சூடாக்கவும். உருட்டிய உருண்டைகளை எண்ணெயில் சேர்த்து  பொன்னிறமாகும் வறுக்கவும். சட்னியுடன் சூடாக பரிமாறவும்.