மீதமான பிரியாணியை புதிது போல மாற்ற சூடாக்கும் போது இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!!!

Author: Hemalatha Ramkumar
9 October 2021, 12:51 pm
Quick Share

பிரியாணி என்றால் எப்போதுமே ஸ்பெஷல் தான். அதற்கு ஈடாக எந்த உணவுமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பல பிரியாணி பிரியர்கள் உள்ளனர். அப்படிப்பட்ட பிரியாணி மீதமாகி விட்டால் அதை தூக்கி எறிய மனசே வராது. எப்படியாவது ஒரு பருக்கை கூட வீணடிக்காமல் சாப்பிட்டு விட வேண்டும் என்று நினைப்போம்.

ஆனால் மீதமான பிரியாணியை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக அதனை சூடு பண்ணி சாப்பிட்டால் நன்றாக இருக்கும். எனவே, பிரியாணியை எந்த முறையில் சூடு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

◆பிரியாணியை சூடு செய்யும் முன்பாக முதலில் ஒரு கை தண்ணீர் எடுத்து அதனை சாதம் மீது தெளிக்கவும்.

◆இந்த தண்ணீர் தான் சாதத்திற்கு தேவையான ஈரப்பதத்தை கொடுத்து அதனை புததாக செய்த உணவு போல மாற்றும்.

◆இல்லையென்றால் பிரியாணி மிகவும் வறண்டு போய், தொண்டையில் சென்று அடைத்து விடும்.

◆இப்போது ஒரு வாணிலியை அடுப்பில் வைத்து அதில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றவும்.

◆இப்போது பிரியாணியை வாணலியில் சேர்த்து சாதம் உடையாதவாறு பொறுமையாக கிளறவும்.

◆பிரியாணியை சூடாக்கும் போது அடுப்பை குறைந்த தீயில் வைத்து சூடாக்கவும்.

◆பிரியாணியை சூடாக்க மற்றொரு வழியும் உள்ளது.

◆இட்லி குக்கரில் தண்ணீர் வைத்து, இட்லி தட்டு மீது பிரியாணியை பரப்பி விடவும்.

◆இட்லி பாத்திரத்தை பத்து நிமிடங்கள் மூடி வைத்து எடுத்தால் சூடான பிரியாணி தயார்.

Views: - 102

0

0

Leave a Reply