ஒரு நாள் வெண்டைக்காய் பொரியல் இப்படி செய்து பாருங்கள்!!!

21 March 2020, 10:22 pm
Quick Share

வெண்டைக்காய் பயன்கள்:

Food -Updatenews360 (2)

◆கரோட்டினாய்டு நிறைந்த வெண்டைக்காய் கண்களுக்கு நல்லது.

◆மலச்சிக்கலை போக்கும்.

◆UV கதிர்களால் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை சரி செய்யும்.

◆இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கும்.

◆உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் வெண்டைக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.

◆சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற காய்கறி.

◆கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும்.

◆கேன்ஸர் வராமல் தடுக்கும்.

தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய்- 1/4 கிலோ

வெண்ணெய்- 1 தேக்கரண்டி

பெரிய வெங்காயம்- 1

தக்காளி- 1

பச்சை மிளகாய்- 2

இஞ்சி பூண்டு விழுது- 1 தேக்கரண்டி

கடுகு- 1 தேக்கரண்டி

கடலை பருப்பு- 1 தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி

மிளகாய் தூள்- 1/2 தேக்கரண்டி

கரம் மசாலா- 1/2 தேக்கரண்டி

மல்லி தூள்- 1/2 தேக்கரண்டி

சீரகத் தூள்- 1/2 தேக்கரண்டி

தயிர்- 3 தேக்கரண்டி

கடலை எண்ணெய்- 3 தேக்கரண்டி

நல்லெண்ணெய்- 2 தேக்கரண்டி

கருவேப்பிலை- ஒரு கொத்து

உப்பு- தேவையான அளவு

செய்முறை:

இந்த வெண்டைக்காய் பொரியல் செய்ய முதலில் ஒரு வானலை அடுப்பில் வைத்து அதில் ஒரு தேக்கரண்டி வெண்ணெய் போடவும். வெண்ணெய் உருகியதும் மூன்று தேக்கரண்டி கடலை எண்ணெய் ஊற்றி கொள்ளலாம். பிறகு ஒரு தேக்கரண்டி கடலை பருப்பு மற்றும் ஒரு தேக்கரண்டி உளுத்தம்பருப்பு சேர்த்து சிவந்து வரும் வரை வதக்கவும்.

இப்போது ஒரு தேக்கரண்டி கடுகு போட்டு பொரிய விடுங்கள். ஒரு நறுக்கிய பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய் மற்றும் ஒரு பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்குங்கள். வெங்காயம் மற்றும் தக்காளி பேஸ்ட் போல வதங்கிய பிறகு ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி கொள்ளவும்.

அடுத்து மசாலாக்கலை சேர்க்க ஆரம்பித்து விடலாம். 1/2 தேக்கரண்டி கரம் மசாலா, 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள், 1/2 தேக்கரண்டி மல்லி தூள், 1/2 தேக்கரண்டி சீரகத் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவும். பிறகு 3 தேக்கரண்டி தயிர் ஊற்றி கலந்து விடுங்கள்.

1/4 கிலோ அளவிற்கு வெண்டைக்காயை கழுவி காய வைத்து பொடியாக நறுக்கி அதனையும் சேர்த்து கிளறி கொள்ளுங்கள். ஒரு நிமிடம் மட்டும் கிளறி விட்டு கொஞ்சமாக தண்ணீரை தெளித்து விடுங்கள். அதிகமாக தண்ணீர் ஊற்றினால் வெண்டைக்காய் குழைந்து விடும். அதனால் ஒரு தேக்கரண்டி அளவிற்கும் குறைவான தண்ணீரை தெளித்து பத்து நிமிடங்கள் மூடி வையுங்கள்.

பத்து நிமிடங்கள் கழித்து இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி ஒரு கொத்து கருவேப்பிலையை பிய்த்து போட்டு இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடலாம்.