மகாராஷ்டிரா ஸ்டைலில் காரசாரமான மொறு மொறு உருளைக்கிழங்கு வறுவல்!!!

Author: Hemalatha Ramkumar
15 March 2022, 3:55 pm

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது உருளைக்கிழங்கு. உருளைக்கிழங்கு வைத்து வறுவல், மசியல், பொரியல், சிப்ஸ், பஜ்ஜி என பல்வேறு வகையான உணவுகளை செய்யலாம். இன்று நாம் பார்க்க இருப்பது மகாராஷ்டிரா மாநிலத்தில் செய்யப்படும் உருளைக்கிழங்கு பொரியல். வித்தியாசமான இந்த ரெசிபியை எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு- 3
காய்ந்த மிளகாய்- 7
புளி- சிறிய நெல்லிக்காய் அளவு
பூண்டு- 5 பல்
கடுகு- 1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு- 2 தேக்கரண்டி
சீரகம்- 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை- ஒரு கொத்து
நல்லெண்ணெய்- 2 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு

செய்முறை:
*முதலில் உருளைக்கிழங்கை உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

*இதற்கு இடையே பதினைந்து நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்த காய்ந்த மிளகாய், ஊற வைத்த புளி மற்றும் பூண்டு சேர்த்து ஒரு பேஸ்டாக அரைத்து எடுக்கவும்.

*உருளைக்கிழங்கு வெந்த பிறகு அதனை தோல் நீக்கி நறுக்கி வைக்கவும்.

*இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும்.

*எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

*இதில் அரைத்த விழுதினை சேர்த்து வதக்கவும்.

*அதன் பச்சை வாசனை போன பிறகு நறுக்கிய உருளைக்கிழங்கை சேர்த்து கிளறவும்.

*நன்கு கிளற கிளற உருளைக்கிழங்கு மொறு மொறுப்பாக கிடைக்கும்.

*கடைசியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

  • wine party right after the wedding... Netizens shower Priyanka திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!