உங்கள் காலை உணவை சிறப்பாக்க இந்த சோயா பன்னீர் ஆம்லெட்டை செய்து பாருங்கள்!!!

By: Poorni
15 October 2020, 8:39 am
Quick Share

ஆரோக்கியமான காலை உணவு மூலம் உங்கள் வயிற்றை நிரப்புவது உங்கள் நாளைத் தொடங்குவதற்கான சிறந்த வழியாகும். நீங்கள் உடல் எடையை அதிகரிப்பதில் விழிப்புடன் இருப்பவராக இருந்தால், உங்களை அதிக நேரம் முழுதாக வைத்திருக்க உங்கள் உணவில் பல சத்தான உணவுகளை சேர்க்க  நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இதன் மூலம் தேவையற்ற பசிக்கு நீங்கள் ஆளாக மாட்டீர்கள்.

சிறந்த சுவைகள் மற்றும் ஊட்டச்சத்தை வழங்கும் பல உணவுகள் இருக்கும்போது, ​​டோஃபு எனப்படும் சோயா பன்னீர் ஆம்லெட் போன்ற  எளிய உணவு இணைவை நீங்கள் எப்போதாவது முயற்சித்திருக்கிறீர்களா? இது விரைவான மற்றும் ஆரோக்கியமான காலை உணவு விருப்பத்தையும் உருவாக்குகிறது. இது முழுக்க முழுக்க சைவம் என்பதால் சைவ பிரியர்களுக்கு ஏற்றது. 

தேவையான பொருட்கள்:

150 கிராம் – சோயா பன்னீர்

1 – வெங்காயம், நறுக்கியது

1 – தக்காளி, 

1- பச்சை குடை மிளகாய்

1- மஞ்சள் குடை மிளகாய் 

1 – பச்சை மிளகாய் 

1-2 – காளான்கள் 

சிறிதளவு கொத்தமல்லி தழை 

1 கப் – கடலை மாவு 

1 தேக்கரண்டி – ஈஸ்ட்

1 தேக்கரண்டி – மஞ்சள் தூள்

சுவைக்கு ஏற்ப உப்பு

1½ கப் – தேங்காய் பால்

தடவுவதற்கு பீநட் பட்டர்

பரிமாற தக்காளி கெட்ச்அப்

செய்முறை:

* ஒரு மிக்ஸி ஜாடியில் கடலை மாவு, ஈஸ்ட், மஞ்சள் தூள், உப்பு, தேங்காய் பால் மற்றும் சோயா பன்னீர் சேர்த்து மிருதுவாக ஆகும் வரை அரைக்கவும். கலவையை ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.

* ஒரு இரும்பு தாவாவை சூடாக்கி, ஒரு மஸ்லின் துணியில் சிறிது பீநட் பட்டரை கட்டி, சூடான தவாவின் மேல் தேய்க்கவும்.

* மாவின் ஒரு பகுதியை சேர்த்து சிறிது பரப்பி ஒரு வட்ட வடிவத்தை  உருவாக்குங்கள்.  நறுக்கப்பட்ட காய்கறிகளை ஆம்லெட் மீது வைத்து மெதுவாக அழுத்தவும்.

* அடிப்பகுதி பொன்னிறமாக மாறும் வரை மிதமான வெப்பத்தில் மூடி சமைக்கவும். பாதியாக மடித்து பரிமாறும் தட்டுக்கு மாற்றவும். இதேபோல், மேலும் ஆம்லெட் தயாரிக்கவும்.

* தக்காளி கெட்ச்அப் கொண்டு சூடாக பரிமாறவும்.

Views: - 60

0

0