இந்த சட்னியை ஒரு முறை செய்து பாருங்கள்… அப்புறம் தினமும் இதையே செய்வீங்க!!!

15 January 2021, 10:47 pm
Quick Share

தோசை, இட்லி செய்யும் போது அதற்கு தொட்டு கொள்ள என்ன செய்வது என எப்போதும் நீங்கள் சிந்திக்கலாம். இன்று நாம் பார்க்க இருப்பது ஒரு செம டேஸ்டான புதினா, மல்லி சட்னி எப்படி என்பதை பார்க்கலாம். இது இட்லி, தோசைக்கு மட்டும் இல்லாமல் சூடான சாதத்திற்கும் அருமையாக இருக்கும். 

தேவையான பொருட்கள்:

புதினா- ஒரு கைப்பிடி

கொத்தமல்லி தழை- இரண்டு கைப்பிடி

எண்ணெய்- மூன்று தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு- ஒரு தேக்கரண்டி

முழு தனியா- 1/4 தேக்கரண்டி

சீரகம்- 1/4 தேக்கரண்டி

பெருங்காயம்- 1/4 தேக்கரண்டி 

பச்சை மிளகாய்- 4

சின்ன வெங்காயம்- ஒரு கைப்பிடி

இஞ்சி- ஒரு துண்டு

பூண்டு- 2 பல்

புளி- சிறிய நெல்லிக்காய் அளவு

கடுகு- 1/2 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய்- 2

கறிவேப்பிலை- 1 கொத்து

செய்முறை:

ஒரு கடாயை அடுப்பில் வைத்து இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்ததும் ஒரு தேக்கரண்டி உளுத்தம்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். இதனோடு 1/4 தேக்கரண்டி முழு தனியா, 1/4 தேக்கரண்டி சீரகம், இரண்டு சிட்டிகை பெருங்காய தூள், நான்கு பச்சை மிளகாய், சிறிய நெல்லிக்காய் அளவு புளி, தேவையான அளவு உப்பு,  ஒரு துண்டு இஞ்சி மற்றும் இரண்டு பல் பூண்டு சேர்த்து வதக்கவும். 

அடுத்து ஒரு கைப்பிடி அளவு சின்ன வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். இதனை ஆற வைத்து இரண்டு தேக்கரண்டி தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும். இப்போது அதே கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி நான்கு தேக்கரண்டி துருவிய தேங்காய், ஒரு கைப்பிடி அளவு புதினா மற்றும் இரண்டு கைப்பிடி அளவு கொத்தமல்லி தழை சேர்த்து வதக்கவும். 

இதனை ஆற வைத்து ஏற்கனவே அரைத்து வைத்த கலவையோடு சேர்த்து மீண்டும் அரைக்கவும். சட்னி இப்போது தயார். இதற்கு தாளிப்பு கொடுக்க எண்ணெயில் கடுகு, காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்க்கவும்.

Views: - 0

0

0