இந்த ஸ்நாக்ஸ் ஒரு முறை செய்து கொடுத்தால் போதும்… பின்னர் அடிக்கடி செய்ய வேண்டி இருக்கும்!!!

Author: Hemalatha Ramkumar
22 November 2021, 11:44 am
Quick Share

வீட்டில் குழந்தைகள் இருந்தாலே எதாவது தின்பண்டம் இருந்தே கொண்டே இருக்க வேண்டும். அவர்கள் அவ்வப்போது தீனி வேண்டும் என்று கேட்கும்போது அவர்களுக்கு ஆரோக்கியமான தின்பண்டங்களை கொடுக்க வேண்டும். உங்களுக்கு உதவும் வகையில் ராஜ்மா மற்றும் பனீர் ஆகியவற்றின் நன்மைகளை உள்ளடக்கிய ஒரு புரதம் நிறைந்த செய்முறையைப் பார்க்கலாம்.

ஆரோக்கிய நன்மைகள்:
ராஜ்மா:-
*எலும்புகளை வலுவாக்கும்
*மெக்னீசியம் நிறைந்தது *ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்திற்கு நல்லது

பன்னீர்:-
*கால்சியம் நிறைந்தது *எலும்புகளை வலுவாக்குகிறது
*பற்கள் செரிமான அமைப்பின் இயல்பான செயல்பாட்டிற்கு உதவுகிறது
*வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது *புரதம் நிறைந்தது *உங்களை நீண்ட நேரம் நிறைவாக உணர வைக்கிறது.

தேவையான பொருட்கள்:
1 கப் ஊறவைத்த ராஜ்மா
1/2 கப் சிவப்பு அவுல்
1/2 கப் துருவிய பன்னீர் உப்பு சுவைக்கு ஏற்ப
1 டீஸ்பூன் எண்ணெய்
1 தேக்கரண்டி வெண்ணெய்

செய்முறை:
ஒரு பாத்திரத்தில், ராஜ்மா, துருவிய பன்னீர், நொறுக்கப்பட்ட சிவப்பு அவுல், உப்பு மற்றும் மிளகு ஆகியவற்றை எடுத்து நன்கு கலக்கவும். இப்போது கலவையில் சிறிது எடுத்து அதிலிருந்து ஒரு தட்டிக் கொள்ளவும். கடாயை சூடாக்கி, சிறிது வெண்ணெய் சேர்க்கவும். தட்டி வைத்த மாவை கடாயில் வைக்கவும். அவ்வளவு தான்… சுவையான கட்லெட் தயார்.

Views: - 107

0

0

Leave a Reply