கோதுமை ரவை பாயாசம்… இத ஒரு முறை செய்தால் பிறகு அடிக்கடி செய்து சாப்பிடுவீங்க!!!

3 February 2021, 8:34 pm
Quick Share

மாலை நேரத்தில் குழந்தைகளுக்கும் வீட்டில் இருப்பவர்களுக்கும் ஏதாவது செய்து கொடுக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணினால் கண்டிப்பாக இந்த கோதுமை ரவை பாயாசத்தை நீங்கள் முயற்சி செய்து பார்க்க வேண்டும். இது செய்வதற்கு எளிதாக இருப்பதோடு, சுவையும் அட்டகாசமாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது இந்த கோதுமை ரவை பாயாசம் எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

கோதுமை ரவை- 1/2 கப்

ஜவ்வரிசி- 1/4 கப்

நெய்- 3 தேக்கரண்டி

வெல்லம்- 1 கப்

தண்ணீர்- 1 1/2 கப்

தேங்காய் பால்- 2 கப்

ஏலக்காய் தூள்- ஒரு தேக்கரண்டி

முந்திரி பருப்பு- 10

செய்முறை:

*பாயாசம் செய்வதற்கு முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைக்கவும். 

*இதில் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி கோதுமை ரவை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வறுத்து எடுக்கவும். 

*இப்போது ஒரு குக்கரில் வறுத்த கோதுமை ரவை, ஜவ்வரிசி மற்றும் தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் வரும் வரை காத்திருங்கள். 

*குக்கர் பிரஷர் அடங்கியதும், வாணலியை அடுப்பில் வைத்து அதில் நாம் வேக வைத்துள்ள கோதுமை ரவையை சேர்க்கவும். 

*இதனோடு வெல்லம் சேர்த்து கலந்து 5 – 10 நிமிடங்கள் கெட்டியாகும் வரை வேக வைக்கவும். 

*அடுத்து தேங்காய் பால் ஊற்றி கிளறி விடவும். கடைசியாக ஏலக்காய் பொடி தூவி வாணலியை அடுப்பில் இருந்து இறக்கி விடவும். 

*கடைசி டச்சாக ஒரு தாளிப்பு கரண்டியில் நெய் ஊற்றி அதில் முந்திரி பருப்பை வறுத்து பாயாசத்தில் சேர்க்கவும். 

*அவ்வளவு தான்… டேஸ்டான கோதுமை ரவை பாயாசம் இப்போது தயார். சூடாக பரிமாறவும்.

Views: - 0

0

0