இந்த மாதிரி பாகற்காய் மசாலா செய்தால் யார் தான் சாப்பிட மாட்டார்கள்…???

Author: Poorni
26 March 2021, 3:24 pm
Quick Share

பாகற்காய் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருந்தாலும் அதனை சாப்பிட பலரும் மறுப்பர். குடல் பூச்சிகளை கொல்வதில் பாகற்காய் வல்லமை கொண்டது.  பாகற்காய் கசப்பு சுவையை கொண்டது என்பது தான் இதற்கு காரணம். இந்த கசப்பு தெரியாதவாறு பாகற்காய் மசாலா செய்து கொடுத்தால் கண்டிப்பாக அனைவரும் சாப்பிடுவர். இப்போது பாகற்காய் மசாலா எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…. 

தேவையான பொருட்கள்:

பாகற்காய் – 3

வெங்காயம் – 1 

பூண்டு – 2 பல் 

இஞ்சி – 1 இன்ச் 

தக்காளி – 2 

மஞ்சள் தூள் – 1 கரண்டி மாங்காய் தூள் – 1 கரண்டி 

மல்லித் தூள் – 1 கரண்டி

உப்பு – சுவைக்கேற்ப

மிளகாய் தூள் – சுவைக்கேற்ப

வெல்லம் அல்லது சர்க்கரை – 1 கரண்டி 

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

*பாகற்காய் மசாலா செய்வதற்கு முதலில் பாகற்காயை நடுவில் வெட்டி அதிலுள்ள விதைகளை நீக்கி, அதனை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

*இப்போது ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் பாகற்காய், இரண்டு கரண்டி தண்ணீர், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.

*ஒரு விசில் வரும் வரை இது வேகட்டும்.

*பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு கரண்டி எண்ணெய் ஊற்றவும்.

*எண்ணெய் சூடானதும் அதில் வெங்காயம், இஞ்சி,  பூண்டு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

*வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதனோடு தக்காளி சேர்த்து வதக்குங்கள்.

*தக்காளி வதங்கிய பின்  தூள், கரம் மசாலா, மல்லித் தூள், உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்.

*இதனோடு வேக வைத்த பாகற்காய், உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறி மூடி போட்டு பத்து நிமிடங்கள் வேக வையுங்கள்.

*மசாலாக்களின் பச்சை வாசனை போனதும் கடைசியில் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

Views: - 193

0

0