இப்படி ஒரு ருசியான இஞ்சி ஊறுகாய நீங்க நிச்சயம் சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க!!!

5 September 2020, 9:30 am
Quick Share

பெரும்பாலான இந்தியர்களின் மதிய உணவானது ஊறுகாய் இல்லாமல் நிறைவடையாது. பல வகையான ஊறுகாய் வகைகள் இருக்க, தொற்று நோய் பரவி வரும் இச்சமயத்தில் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய இஞ்சி ஊறுகாய் எப்படி செய்வது என இந்த பதிவில் பார்ப்போம்….

தேவையான பொருட்கள்:

இஞ்சி- 1/4 கிலோ

கடுகு- ஒரு தேக்கரண்டி

வெந்தயம்- ஒரு தேக்கரண்டி

மிளகாய் தூள்- 2 தேக்கரண்டி

புளி- ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு

வெல்லம்- 1 1/2 தேக்கரண்டி

நல்லெண்ணெய்- 150 ml

கறிவேப்பிலை- ஒரு கொத்து

செய்முறை:

இஞ்சி ஊறுகாய் செய்ய முதலில் இதற்கு தேவையான ஒரு பொடியை அரைத்து கொள்ளலாம். அதன் ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி இஞ்சி மற்றும் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை வறுக்கவும். கருகி விடாமல் வறுத்து எடுத்து கொள்ளவும். இது ஆறிய பின் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து கொள்ளுங்கள். 

அடுத்து கடாயில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு 1/4 கிலோ தோல் நீக்கி சுத்தம் செய்து நறுக்கிய இஞ்சியை சேர்க்கவும். இஞ்சியை வறுத்து எடுத்து அதனையும் ஆறிய பின் அரைத்து கொள்ளவும். இப்போது அதே கடாயில் 150 ml நல்லெண்ணெய் சேர்த்து கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். 

தாளித்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு அந்த சூட்டோடு இருக்கும் போது இரண்டு தேக்கரண்டி மிளகாய் தூள் மற்றும் நாம் அரைத்து வைத்த பொடியை சேர்த்து வதக்கவும். அடுப்பு எரியும் போது மிளகாய் தூள் சேர்த்தால் அது கருகி விடும். எனவே அடுப்பை அணைத்து விட்டு தான் சேர்க்க வேண்டும். 

இப்போது அடுப்பை மீண்டும் பற்ற வைத்து கொள்ளுங்கள். வதக்கி அரைத்த இஞ்சி விழுதினை சேர்த்து வதக்கவும். ஊறுகாய்க்கு தேவையான அளவு உப்பையும் சேர்த்து கொள்ளலாம். இஞ்சியை நாம் ஏற்கனவே வதக்கி விட்டதால் இப்போது அதிகமாக வதக்க தேவையில்லை. 

ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு புளியை கரைத்து அந்த நீரை ஊற்றி கொள்ளுங்கள். கூடவே ஒரு துண்டு வெல்லத்தையும் பொடியாக்கி சேர்க்கவும். இந்த புளி தண்ணீரிலே இஞ்சி வெந்து எண்ணெய் தெளிந்து வந்த பிறகு அடுப்பை அணைத்து விடலாம். ஊறுகாய் இப்போது தயாராக உள்ளது. இது நன்றாக ஆறிய பின் ஈரம் இல்லாத ஒரு பாட்டிலில் போட்டு சேமித்து வைத்தால் ஒரு வருடம் வரை கூட கெடாமல் இருக்கும்.

Views: - 0

0

0