யம்மியான குறைந்த கலோரி கோல்ட் காபி… வெயிலுக்கு இதமா இருக்கும்… ஜாலியா குடிங்க!!!

20 April 2021, 5:30 pm
Quick Share

பலரது ஃபேவரெட்டாக இருக்கும் கோல்ட் காபியை ஒரு சிலரால் சந்தோஷமாக குடிக்க முடியாது. ஏனெனில் கோல்ட் காபியில்  கலோரிகள்  நிறைந்துள்ளது. ஆனால் இங்கு உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. டையட் ஃபாலோ செய்பவரும் கூட கோல்ட் காபியை சாப்பிடலாம். அப்படி ஒரு செய்முறையை தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். 

தேவையான பொருட்கள்:- 

1/2 கப் கருப்பு காபி

1 தேக்கரண்டி கொக்கோ தூள்

1 தேக்கரண்டி நியூட்டெல்லா 

1 கப் தேங்காய் பால் 

செய்முறை:

முதலில் அரை கப் கருப்பு காபியுடன் ஐஸ் கட்டிகளை சேர்த்து கலக்குங்கள்.

பிறகு இந்த கலவையில்  ஒரு தேக்கரண்டி கொக்கோ பவுடர், 1 தேக்கரண்டி நியூட்டெல்லா, 1 கப் தேங்காய் பால் சேர்க்கவும்.

அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலக்கவும். அவ்வளவு தான்…  சுவையான ஆரோக்கியமான கோல்ட்  காபி இப்போது தயார். 

கோல்ட் காபியின் நன்மைகள்:

1. உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது: 

காபியில் காஃபின் உள்ளது. இது உங்கள் வளர்சிதை மாற்ற  விகிதத்தை 11% வரை அதிகரிக்கும் என்று காட்டப்பட்டுள்ளது. இது உங்கள் உடலில் கொழுப்பை எரிக்கும் செயல்முறையை அதிகரிக்கிறது. இதனால்  எடை இழப்பையும் ஊக்குவிக்கிறது.  

2. உங்கள் மனநிலையை மேம்படுத்த உதவும்: 

கோல்ட் காபியில் உள்ள காஃபின் உங்கள் மனநிலையை மேம்படுத்தவும் உதவும். குறிப்பாக நீங்கள் தூக்கமின்மையால் அவதிப்பட்டு இருந்தால் கோல்ட் காபி உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வு. 

3. உங்கள் வயிற்றுக்கு இதமாக இருக்கிறது: 

நீங்கள் சூடான காபியை உட்கொள்ளும்போது அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் கோல்ட் காபி  செரிமான அமைப்பின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் குடல் எரிச்சலைக் குறைக்கும்.

Views: - 32

0

0