இத அளவா குடிச்சா ஹார்ட் அட்டாக் வராம தப்பிச்சுக்கலாம்!!!

Author: Hemalatha Ramkumar
15 October 2024, 7:25 pm
Quick Share

தேங்காய் மட்டுமல்ல தேங்காயை அரைத்து அதில் இருந்து எடுக்கப்படும் தேங்காய் பாலிலும் எக்கச்சக்கமான நன்மைகள் பொதிந்து கிடைக்கிறது. தேங்காய் பால் குடிப்பதற்கு டேஸ்ட்டாக இருப்பது மட்டுமல்லாமல், அதில் பல்வேறு ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளது. ஒரு கப் துருவிய தேங்காயில் 2 கப் தண்ணீர் ஊற்றி அரைத்து அதனை வடிகட்டி சிறிதளவு உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து பருகினால் சுவை  அட்டகாசமாக இருக்கும். பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களுக்கு அலர்ஜி கொண்டுள்ள நபர்களுக்கு தேங்காய் பால் ஒரு சிறந்த மாற்றாக அமைகிறது. 

தேங்காய் பால் குடிப்பது இதய ஆரோக்கியத்திற்கு ஆதரவு தரும் மற்றும் ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீட்டில் செய்யப்பட்ட தேங்காய் பாலை மிதமான அளவு சாப்பிட்டு வர உங்களுடைய இதய ஆரோக்கியம் மேம்படும். 

தேங்காய் பாலில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிப்பதால் இது உங்களுடைய இதயத்திற்கு நன்மை அளிக்கிறது. 

எனினும் இதில் சாச்சுரேட்டட் ஃபேட்டும் அதிகமாக இருக்கும் என்பதால் இதயத்திற்கு நன்மை தரும் பழங்கள் மற்றும்  காய்கறிகளையும் இதனுடன் சேர்த்து சாப்பிடுவது அவசியம். தேங்காய்ப்பால் சாப்பிடுவது ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைப்பும் என்பதை நிரூபிப்பதற்கு போதுமான ஆய்வுகள் இல்லாவிட்டாலும் இதனை உங்களுடைய அன்றாட டயட்டில் சேர்ப்பது நிச்சயமாக உங்களுடைய இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஏனெனில் தேங்காய் பாலில் MCT என்று அழைக்கப்படும் மீடியம் செயின் டிரைகிளிசரைடுகள் இருக்கிறது. இது இதய ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை தரக்கூடியது. 

நமது உடலில் இருக்கக்கூடிய HDL கொலஸ்ட்ராலை அதிகரிப்பதன் மூலமாக இதயத்திற்கு நன்மை அளிக்கிறது. மேலும் தேங்காய் பாலில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக்கி இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. ஆனால் தேங்காய் பாலின் முழு நன்மைகளும் உங்களுக்கு கிடைப்பதற்கு அது ஃபிரஷாக இருப்பதையும் அதில் எந்த ஒரு கெமிக்கல் அல்லது பிரிசர்வேட்டிவ்கள் சேர்க்கப்படாமல் இருப்பதையும் நீங்கள் உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில் அது உங்களுடைய இதயத்திற்கு மோசமானதாக மாறிவிடலாம். ஆகவே கடைகளில் வாங்குவதற்கு பதிலாக வீட்டிலேயே தேங்காய் பால் தயாரித்து சாப்பிடுவது சிறந்தது. 

இதையும் படிக்கலாமே: பேஷியல் யோகா: தினமும் 10 நிமிஷம் செலவு செய்தாலே போதும்… எப்போதும் இளமையா இருக்கலாம்!!!

தேங்காய்ப்பால் குடிப்பதால் உடல் நலனுக்கு ஏதேனும் ஆபத்து உண்டாகுமா? 

இதய பிரச்சினைகள் உள்ளவர்கள், அதிக கொலஸ்ட்ரால் அல்லது டயாபடீஸ் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தேங்காய்ப்பாலை மிதமான அளவு பருக வேண்டும். ஏனெனில் தேங்காய் பாலில் அதிக அளவு சாச்சுரேட்டட் கொழுப்பு இருப்பதால் இது இதய நோய் மற்றும் பிற சமந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கலாம். 

இந்தப் பிரச்சினைகளை குறைப்பதற்கு தேங்காய் பாலில் உள்ள சாச்சுரேட்டட் கொழுப்புகளை நீங்கள் சமநிலைப்படுத்த வேண்டும். அதற்கு நட்ஸ் மற்றும் அவகாடோ, அதிக அளவு காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • virat kohli தம்பி கிட்ட வாப்பா… விராட் கோலியை கை பிடித்து இழுத்து அலப்பறை செய்த Aunty – தீயாய் பரவும் வீடியோ!
  • Views: - 122

    0

    0