ரொம்ப ஸ்ட்ரெஸுடா இருக்கா.. ஒரு மாசத்துக்கு இத தவறாம ஃபாலோ பண்ணா டென்ஷன் எல்லாம் பஞ்சா பறந்து போய்டும்!!!

Author: Hemalatha Ramkumar
22 October 2024, 3:34 pm

காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பதை நாம் அறிவோம். ஆனால் அதுவே வெதுவெதுப்பான தண்ணீரை குடிக்கும் போது பலன்கள் இன்னும் பன்மடங்காக அதிகரிக்கும். ஒரு மாதத்திற்கு தொடர்ந்து நீங்கள் வெதுவெதுப்பான தண்ணீரை குடித்து வந்தால் ஆச்சரியமூட்டும் பல நன்மைகளை பெறலாம். அது என்ன என்பதை தெரிந்து கொண்டால் நிச்சயமாக நீங்களும் தினமும் வெதுவெதுப்பான தண்ணீர் குடிக்க ஆரம்பித்து விடுவீர்கள். 

செரிமானம் மேம்படும் வெதுவெதுப்பான தண்ணீர் செரிமான அமைப்பை வலுப்படுத்தி, மலச்சிக்கல் பிரச்சனையை நீக்குகிறது. 

நல்ல ரத்த ஓட்டம் வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது நமது உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். 

மூட்டு வலியில் இருந்து நிவாரணம் 

மூட்டு வலி இருப்பவர்கள் தினமும் வெதுவெதுப்பான தண்ணீர் குடித்து வந்தால் கூடிய விரைவில் மூட்டு வலியில் இருந்து விடுபடலாம். 

இதையும் படிக்கலாமே: இந்த அறிகுறிகள வச்சு அதிக கொலஸ்ட்ரால் இருக்கிறத ஈசியா கண்டுபிடிச்சிடலாம்!!!

சருமத்திற்கு நல்லது உங்களுடைய சருமம் பளபளப்பாகவும், மென்மையாகவும் மாற வேண்டும் என்று நினைத்தால் தினமும் வெதுவெதுப்பான தண்ணீரை பருகி வாருங்கள். 

மன அழுத்தத்தை குறைக்கிறது வெதுவெதுப்பான தண்ணீர் மனதை அமைதிப்படுத்தி, மன அழுத்தத்தை போக்குகிறது. 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது வெதுவெதுப்பான தண்ணீர் நம்முடைய உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்றுகள் நம்மளை தாக்காத வண்ணம் பாதுகாக்கிறது. 

உடல் எடையை குறைக்க உதவுகிறது 

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள்  வெதுவெதுப்பான தண்ணீரை குடிப்பதன் மூலமாக நல்ல பலன் அடையலாம். ஏனெனில் வெதுவெதுப்பான தண்ணீர் நமது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து அதன் மூலமாக உடல் எடையை குறைக்கிறது.

எனவே ஒரு பைசா கூட செலவு செய்யாமல் உங்கள் உடல் ஆரோக்கியத்தை பேணி காக்க இவ்வளவு நல்ல வாய்ப்பு இருக்கும்போது நிச்சயமாக அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Ajith viral interview இனியாவுது திருந்துங்க…ரசிகர்களை பார்த்து அஜித் கேட்ட நச் கேள்வி…வைரலாகும் வீடியோ..!