தலைமுடிக்கு மீன் எண்ணெயா… இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!!

Author: Hemalatha Ramkumar
26 November 2024, 5:15 pm

மீன் எண்ணெய் என்பது நமது உணவில் ஒரு சிறந்த சப்ளிமெண்டாக கருதப்படுகிறது. எனினும் இதில் உள்ள பல்வேறு பண்புகள் நமது தலைமுடிக்கும் அதிசயங்களை ஏற்படுத்தக் கூடியதாக அமைகிறது. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன் எண்ணெய் வீக்கத்தை குறைத்து, ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, தலை முடியின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்கிறது. இந்த பதிவில் மீன் எண்ணெய் மூலமாக தலைமுடிக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம். 

ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது 

மயிர் கால்களில் உள்ள ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலமாக மீன் எண்ணெய் மயிர்க்கால்களுக்கு போதுமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜன் கிடைப்பதை உறுதி செய்கிறது. இதனால் மயிர் கால்கள் ஆரோக்கியமாகி தலை முடி வலுவாக இருக்கும். 

இளநரையை தடுக்கிறது

மீன் எண்ணெய் என்பது இளநரைக்கு எதிராக போராடுவதற்கான வலுவான ஒரு பொருளாக அமைகிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்கள் ஃப்ரீ  ரேடிக்கல்கள் காரணமாக செல்களுக்கு ஏற்படும் தீமைகளுக்கு எதிராக பாதுகாப்பு வழங்குகிறது. இது இளநரையை தடுத்து உங்களை இளமையாக வைத்திருக்க உதவுகிறது. 

தலைமுடி உதிர்வை தடுக்கிறது 

மீன் எண்ணெயில் DHA மற்றும் EPA ஆகிய இரண்டு வலுவான கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை தலைமுடி உதிர்வை தடுப்பதற்கு மிகவும் அவசியம். இந்த கொழுப்பு அமிலங்கள் மயிர் கால்களில் உள்ள வீக்கத்தை குறைத்து, தலைமுடி வளர்வதற்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்கி தருகிறது. 

இதையும் படிக்கலாமே: கர்ப்பகால சவால்களை சிறப்பாக எதிர்கொள்ள உதவும் பாத மசாஜ்!!!

பொடுகை குறைக்கிறது 

மீன் எண்ணெயில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலம் மயிர் கால்களில் உள்ள எரிச்சலைப் போக்கி பொடுகை குறைக்கிறது. இது உங்களுக்கு ஆரோக்கியமான மயிர் கால்களை தருகிறது. ஆரோக்கியமான மயிர் கால்களில் பொடுகு ஏற்படாது. 

தலைமுடியின் அமைப்பு மற்றும் அடர்த்தியை அதிகமாக்குகிறது

வழக்கமான முறையில் மீன் எண்ணெய் சப்ளிமெண்டுகளை பயன்படுத்தி வந்தால் தலைமுடியின் அமைப்பு மேம்படுத்தப்பட்டு அடர்த்தியான தலை முடியை பெறலாம். 

சூரிய சேதத்திற்கு எதிரான பாதுகாப்பு 

கொழுப்பு அமிலங்களில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்கள் உங்களுடைய தோலில் உள்ள செல்களை சூரிய கதிர்களால் ஏற்படும் சேதங்களில் இருந்து பாதுகாத்து மயிர் கால்களை ஆரோக்கியமாக மாற்றுகிறது. 

தலைமுடியை பளபளப்பாக்குகிறது 

மீன் எண்ணெயில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலம் மயிர் கால்களில் உள்ள ஈரப்பதத்தை தக்க வைத்து, தலைமுடியை அழகாகவும் பளபளப்பாகவும், மாற்றுகிறது.

  • ajith kumar talking about quit cinema in interview after lonng time சினிமாவுக்கு டாட்டா! எப்போவேணாலும் நடக்கலாம்? பேட்டியில் அதிர்ச்சியை கிளப்பிய அஜித்…