மதிய நேரத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!!

Author: Hemalatha Ramkumar
5 December 2022, 1:20 pm

பொதுவாக உணவு என்றாலே அதனை கவனமாக தேர்ந்தெடுத்து ஆரோக்கியமான சமச்சீரான உணவுகளையே நாம் சாப்பிட வேண்டும். இல்லையெனில், ஆரோக்கியத்தில் கேடு விளைவிப்பதோடு மயக்கம், செரிமான கோளாறு, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு போன்ற அசௌகரியங்களும் ஏற்படலாம். அந்த வகையில் மதிய உணவாக என்னென்ன உணவுகளை சாப்பிடலாம், எவற்றை தவிர்க்க வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

*மதிய உணவில் சூப் சாப்பிடுவதைத் தவிர்த்து விடுங்கள். ஏனெனில் சூப் சாப்பிட்டால் பசி அதிகமாகும். இதன் காரணமாக எப்போதும் சாப்பிடுவதை விட நீங்கள் சற்று கூடுதலாக சாப்பிடுவீர்கள். இதனால் உங்கள் உடல் எடை அதிகரிக்கும்.

*ஒரு சிலர் மதிய உணவாக பழ ஜூஸை சாப்பிடுவார்கள். இதனை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் ஜூஸ் குடித்த சில மணி நிமிடங்களில் உங்களுக்கு மீண்டும் பசி எடுக்கும். இது உங்களை பொரித்த மற்றும் வறுத்த உணவுகளை சாப்பிட தூண்டும்.

*நூடுல்ஸ், பாஸ்தா போன்ற உணவுகள் சுவையாக இருந்தாலும் அவற்றை மதிய நேரத்தில் சாப்பிடுவதை தவிர்க்கவும். இது போன்ற உணவுகளில் அதிக அளவில் கார்ப்போஹைட்ரேட் உள்ளதால் உடல் எடையை கூட்டி விடும். இந்த மாதிரியான உணவுகளை முடிந்த வரை சாப்பிடாமல் தவிர்ப்பதே நம் ஆரோக்கியத்திற்கு நல்லது.

*ஃப்ரைட் ரைஸ், பர்கர் மற்றும் பீட்சா போன்ற ஃபாஸ் ஃபுட்கள் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். இவை உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அதிகரிக்கச் செய்யும் உணவுகள். இது உடல் பருமன் மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றை ஏற்படுத்தும்.

*பிரட் சார்ந்த உணவுகளை மதிய நேரத்தில் சாப்பிட வேண்டாம். அதிகப்படியான கார்ப்போஹைட்ரேட் நிறைந்தவை என்பதால் இதனால் மலச்சிக்கல் போன்ற செரிமான கோளாறு ஏற்படலாம்.

*சாலட் போன்ற குறைந்த கலோரி உணவுகளை மதிய வேலையில் சாப்பிடுவதைத் தவிர்த்து விட்டு காலையில் சாப்பிடுவது நல்லது.

*வறுத்த மற்றும் பொரித்த உணவுகளில் கொழுப்பு நிறைந்துள்ளதால் இது போன்றவற்றை மதியத்தில் சாப்பிட வேண்டாம்.

மதிய நேரத்தில் சாப்பிடும் உணவுகளில் புரதங்கள், நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து நிறைந்த உணவாக இருத்தல் அவசியம்.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!