மெலிந்த தோற்றத்திற்கு குட்-பை சொல்லிட்டு ஈசியா வெயிட் கெயின் பண்ணுங்க!!!

Author: Hemalatha Ramkumar
23 November 2024, 5:36 pm

எலும்புக்கூடு தெரியும் அளவுக்கு மெலிந்த உடலோடு இருப்பது நம்முடைய தன்னம்பிக்கையை நொறுக்கி, உடல் நலன் மற்றும் மன நலன் ஆகிய இரண்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால் இனியும் இதனை நினைத்து நீங்கள் கவலைப்பட தேவையில்லை. ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரித்து உங்களுடைய தன்னம்பிக்கையை அதிகரிக்க வழி கிடைத்தாயிற்று. ஊட்டச்சத்து குறைபாடு மிகுந்த தோற்றத்திற்கு குட்பை கூறிவிட்டு, வலிமையான ஆற்றல் மிகுந்த அதே நேரத்தில் ஆரோக்கியமான உங்களுடைய ஒரு தோற்றத்தை காட்ட வேண்டியதற்கான நேரம் வந்தாச்சு. புத்திசாலித்தனமான மாற்றங்களை செய்தாலே ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரிக்கலாம்.

ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளான நட்ஸ், விதைகள், முழு தானியங்கள், அவகாடோ பழங்கள் மற்றும் மெலிந்த புரதங்கள் போன்றவற்றை சாப்பிட்டு உங்களுடைய கலோரிகளை அதிகரிப்பதில் இருந்து நீங்கள் துவங்கலாம். இந்த உணவுகள் உங்களுக்கு தேவையான ஆற்றலை வழங்கி, தசை வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்கும். இந்த பதிவில் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரிக்க உதவும் சில குறிப்புகள் பற்றி பார்க்கலாம். 

அடிக்கடி சாப்பிடுங்கள் 

உடல் எடையை அதிகரிப்பதற்கான மிகவும் எளிமையான அதே நேரத்தில் சிறந்த ஒரு வழி அடிக்கடி சாப்பிடுவது. ஒரு நாளைக்கு 3 பெரிய உணவுகளை சாப்பிடுவதற்கு பதிலாக 5 முதல் 6 சிறிய உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு நீங்கள் செய்யும் பொழுது நாள் முழுவதும் நீங்கள் அதிகப்படியான கலோரிகளை சாப்பிடுவீர்கள். அதே நேரத்தில் உங்களுடைய பசியும் கட்டுப்படுத்தப்படும். 

கலோரியை அதிகரிக்கவும்

ஒரு வேலை உங்களுக்கு டீ, காபி, சோடா போன்ற பானங்கள் குடிப்பது மிகவும் பிடிக்கும் என்றால் அதற்கு பதிலாக ஜூஸ், பால் அல்லது ஸ்மூத்தி போன்ற ஆரோக்கியமான ஆப்ஷனுக்கு மாறுங்கள். முழு கொழுப்பு கொண்ட பால் சார்ந்த பொருட்களில் நல்ல அளவு கலோரிகள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரிக்க உதவும். 

இதையும் படிக்கலாமே: தினமும் 15 நிமிடங்கள் செலவு செய்தாலே போதும்… சுவாச ஆரோக்கியம் பற்றி கவலையில்லாமல் இருக்கலாம்!!!

ஆரோக்கியமான உணவு

அனைத்து பழங்கள் மற்றும் காய்கறிகளில் கலோரிகள் குறைவாக இருக்கும் என்ற தவறான கருத்து நிலவுகிறது. எனினும் அவகாடோ பழங்கள், உருளைக்கிழங்கு மற்றும் வஞ்சரம் போன்ற கொழுப்பு மீன்களில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. 

ஊட்டச்சத்து மிகுந்த சாலட் 

ஊட்டச்சத்து மிகுந்த சாலட்களை சேர்ப்பதன் மூலமாக உங்களுடைய உணவுகளை நீங்கள் மேம்படுத்தலாம். அவகாடோ, நட்ஸ், விதைகள், சீஸ், பேரிக்காய், ஆப்பிள் மற்றும் பெர்ரி போன்ற பழங்களை சேர்த்து சாப்பிடலாம். இது ஆரோக்கியமான மற்றும் விரைவான முறையில் உடல் எடையை அதிகரிப்பதற்கு உதவும். 

சரியான நேரத்தில் தண்ணீர் குடிப்பது 

தண்ணீர் என்பது உடலில் உள்ள நச்சுக்களை அகற்றுவதற்கு மிகவும் அவசியம். மேலும் நீங்கள் சரியான நேரத்தில் தண்ணீர் குடிப்பது மிக மிக முக்கியம். உணவு சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பதை தவிர்த்து விடுங்கள். மாறாக உணவு சாப்பிட்ட 30 நிமிடங்களுக்கு பிறகு தண்ணீர் குடிப்பது செரிமானத்தை தூண்டி,  ஊட்டச்சத்துக்கள் சிறந்த முறையில் உறிஞ்சப்படுவதை உறுதி செய்யும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!