மாத்திரை, மருந்து சாப்பிடும் போது தப்பித்தவறி கூட இதெல்லாம் சாப்பிடாதீங்க!!!

Author: Hemalatha Ramkumar
17 April 2023, 12:10 pm
Quick Share

ஆரோக்கியமான வாழ்க்கையை மேற்கொள்ள ஆரோக்கியமான உணவுகள், தேவையான உடற்பயிற்சி, சரியான வாழ்க்கை முறை தேர்வுகள் போன்றவை அவசியம். எனினும் நாம் என்னதான் கவனமாக இருந்து வந்தாலும் நமது உணவுப் பழக்க வழக்கங்கள் காரணமாக ஒரு சில நோய் தொற்றுகளுக்கு ஆளாக வேண்டி உள்ளது. அவ்வாறு நாம் நோய்வாய்ப்படும்பொழுது மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை சாப்பிடுகிறோம்.

ஆனால் இவ்வாறு மருந்து சாப்பிட்டால் மட்டுமே நோய்கள் குணமாகும் என்று நாம் நினைத்தால் அது தவறு. மருந்துகளை சாப்பிட்டாலும் உணவில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதோடு ஒரு சில உணவுகள் மருந்துகளுடன் வினைபுரிவதால் பக்க விளைவுகள் ஏற்படலாம். ஆகையால் மருந்துகள் சாப்பிடும் போது என்னென்ன உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மருந்துகள் எடுத்துக் கொள்ளும் பொழுது ஆற்றல் பானங்கள் குடிப்பதை முற்றிலும் தவிர்க்கவும். ஏனெனில் ஆற்றல் பானங்கள் மருந்துகள் கரைவதில் தாமதத்தை ஏற்படுத்தும். அதோடு மருந்துகளுடன் வினைபுரிந்து எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

மதுபானங்கள் எப்பொழுதுமே நம் உடலுக்கு கேடு விளைவிக்க கூடியவை. ஆகையால் அதனை எப்போதும் தவிர்த்தல் நல்லது. எனினும் மருந்துகள் எடுத்துக் கொள்ளும் பொழுது மதுபானங்கள் குடிப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். ஏனெனில் மதுபானங்கள் மற்றும் மருந்துகள் ஆகிய இரண்டையும் ஒன்றாக எடுத்துக் கொள்வது, கல்லீரலில் மோசமான தாக்கத்தை உண்டாக்கும்.

ஒரு சிலருக்கு பாலில் மாத்திரைகளை கலந்து சாப்பிடும் பழக்கம் உண்டு. ஆனால் இதனை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் ஏனெனில் பாலில் உள்ள ஊட்டச்சத்துக்களுடன் மருந்துகள் எதிர்மறையாக வினை புரியும் ஆகையால் ஒருபோதும் பால் மற்றும் பால் பொருட்களுடன் மருந்துகளை எடுத்துக் கொள்ளக் கூடாது

முல்லெத்தி என்ற மூலிகை ஆயுர்வேதத்தில் பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. எனினும் இதில் உள்ள கிளைசிரைசின் என்ற கலவை மருந்துகளின் விளைவை குறைப்பதாக கூறப்படுகிறது. ஆகையால் மருந்துகள் சாப்பிடும் பொழுது முல்லேத்தி எடுத்துக் கொள்வது அறிவுறுத்தப்படவில்லை.

பொதுவாக நோய்வாய்ப்படும் பொழுது பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிக அளவில் எடுத்துக் கொள்ளும்படி நமக்கு சொல்லப்பட்டுள்ளது. ஆனால் முட்டைகோஸ், ப்ராக்கோலி போன்ற வைட்டமின் கே சத்து அதிகம் உள்ள காய்கறிகளை மருந்துகள் சாப்பிடும் பொழுது எடுத்துக்கொள்ள கூடாது. ஏனெனில் இது மருந்துகளுடன் எதிர்மறையாக வினை புரியும் தன்மை கொண்டது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 238

1

0