குங்குமப்பூ பயன்கள்: காஸ்ட்லியா இருந்தாலும் வொர்த்து தான்ப்பா…!!!

Author: Hemalatha Ramkumar
17 April 2023, 10:26 am
Quick Share

தங்க நிற மசாலாவான குங்குமப்பூ பற்றிய பல இரகசியங்கள் பலருக்கு தெரியாது. கர்ப்ப காலத்தில் பெண்கள் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்பது தான் பலரும் அறிந்தது. இது உண்மையா என்பது பற்றியும், இதைத் தவிர குங்குமப்பூ பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில நன்மைகள் பற்றியும் இந்த பதிவில் காணலாம்.

குங்குமப்பூவில் உள்ள பல்வேறு தாவர கலவைகள் ஆன்டிஆக்ஸிடன்ட்களாக செயல்படுகின்றன. இவை மூளை செல்களை ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களில் இருந்து பாதுகாக்கிறது.

குங்குமப்பூ ஒருவரின் மனநிலையை திறம்பட மேம்படுத்தும். லேசான முதல் மிதமான மனச்சோர்வின் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க குங்குமப்பூ உதவுவதாக பல்வேறு ஆய்வுகள் காட்டுகின்றன. கூடுதலாக, குங்குமப்பூவை தினமும் உட்கொள்வது மனச்சோர்வுக்கு ஒரு பாரம்பரிய சிகிச்சையாக செயல்படுகிறது என்றும் பல ஆய்வுகள் காட்டுகின்றன. இது மனச்சோர்வுக்கு சிகிச்சையளிப்பதற்கான மற்ற மருந்துகளை விட குறைவான பக்க விளைவுகளைக் கொண்டுள்ளது.

மாதவிடாய் தொடங்கும் முன் ஏற்படும் உளவியல், உணர்ச்சி மற்றும் உடல் சார்ந்த அறிகுறிகளுக்கு சிகிச்சையளிப்பதில் குங்குமப்பூ பயனுள்ளதாக இருக்கும். குங்குமப்பூவை தினமும் 30 மில்லிகிராம் உட்கொள்வது, தலைவலி மற்றும் பிற PMS அறிகுறிகளை குணப்படுத்த உதவும் என்று ஆய்வுகள் காட்டுகிறது.

குங்குமப்பூவில் லிபிடோவை அதிகரிக்கும் பண்பு உள்ளது. விறைப்புத்தன்மை குறைபாட்டிற்கு சிகிச்சையளிப்பதற்கும் இது உதவியாக இருக்கும். குறிப்பாக ஆண்டிடிரஸன் மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு இது உதவியாக இருக்கும். இது பெண்களுக்கு உடலுறவின் போது ஏற்படும் வலியைக் குறைக்கவும், பாலியல் உந்துதலை அதிகரிக்கவும் உதவுகிறது.

எடை அதிகரிப்பதற்கான பொதுவான காரணங்களில் ஒன்று நொறுக்கு தீனி சாப்பிடுவது. குங்குமப்பூ பசியைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் நொறுக்கு தீனி சாப்பிடுவதைத் தடுக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குங்குமப்பூ உட்கொள்வது வயிறு நிறைந்த உணர்வைத் தருகிறது. இது எடை இழப்புக்கு உதவுகிறது.

குங்குமப்பூ தோல் ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளை அளிக்கிறது. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு கூறுகள் சருமத்தை பிரகாசிக்க செய்கிறது மற்றும் கறைகளை போக்குகிறது. இதன் காரணமாக குங்குமப்பூ பல்வேறு அழகு சாதனப் பொருட்கள் மற்றும் கிரீம்களில் பயன்படுத்தப்படுகின்றது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 238

0

0