நாலே நாலு மிளகு இருந்தா போதும்… உங்க வெயிட் குறைய போறது உறுதி!!!
Author: Hemalatha Ramkumar30 ஜூன் 2023, 7:32 மணி
என்ன பண்ணாலும், என்ன சாப்பிட்டாலும் உடல் எடையை குறையவே மாட்டேங்குதே என்று சொல்பவர்களுக்கு ஒரு குட் நியூஸ். உங்கள் வீட்டில் எளிதாக கிடைக்கக்கூடிய பொருளான மிளகு வைத்து உடல் எடையை எவ்வாறு குறைக்கலாம் என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம்.
பொதுவாக மிளகு என்றாலே அதனை நாம் காரத்துடன் ஒப்பிடுவோம். மருத்துவ குணங்கள் என்று வரும்பொழுது மிளகு சளி, இருமல் போன்றவற்றிற்கு தீர்வாக தீர்வு தருகிறது என்பதை நம்மில் பெரும்பாலானோர் அறிவோம். ஆனால் நாம் அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக மிளகு உடல் எடையை குறைக்கவும் பயனுள்ளதாக இருக்கிறது.
உடல் எடையை குறைக்கும் பயணத்தில் இருப்பவர்கள் தங்களது உணவில் மிளகு சேர்ப்பது ஒரு கூடுதலாக அமைகிறது. கருப்பு மிளகில் காணப்படும் பெப்பரின் என்ற பொருள் நமது உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, செரிமானத்தை மேம்படுத்தி, உடல் எடையை குறைக்க உதவுகிறது. பொதுவாக நாம் சமைக்கும் உணவுகளில் மிளகு சேர்த்து வந்தாலே போதுமானது. மிளகு ரசம், ஆம்லெட், உருளைக்கிழங்கு அல்லது வாழைக்காய் வறுவல் போன்ற ஏதாவது ஒரு உணவில் மிளகு சேர்த்து சாப்பிடுவது உங்கள் உடல் எடையை விரைவாக குறைப்பதற்கு உதவியாக இருக்கும்.
அடுத்தபடியாக மிளகு டீ பருகுவது உடல் எடையை குறைக்க உதவும் என்று சொல்லப்படுகிறது. இதற்கு ஒன்றரை கிளாஸ் அளவு தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் ஒரு டீஸ்பூன் கருப்பு மிளகு பொடியை சேர்க்கவும். இது ஒரு சில நிமிடங்கள் கொதித்த உடன் வடிகட்டி பருகலாம். இந்த தேநீர் கலோரிகள் மற்றும் உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்பை எரிக்க உதவுகிறது. உணவு சாப்பிட்ட பிறகு இந்த மிளகு டீ குடிப்பது பயனுள்ளதாக இருக்கும்.
அடுத்து மிளகு வைத்து ஒரு டீடாக்ஸ் பானமும் தயாரிக்கலாம். அதற்கு ஒரு டீஸ்பூன் கருப்பு மிளகு பொடியை எலுமிச்சை சாறு, ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் தண்ணீரில் கலக்க வேண்டும். இந்த கஷாயமானது உடலில் இருக்கக்கூடிய கழிவுகளை அகற்றி, நமது வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, தொப்பையை குறைக்கிறது. காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் இந்த பானத்தை குடிப்பது சிறந்த பலன்களை தரும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
0
1