தினமும் இளநீர் குடிச்சாலே வெயிட் குறையுமாம்!!!

Author: Hemalatha Ramkumar
29 June 2023, 3:47 pm
Quick Share

இன்றைய நவீன உலகில் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், உடல் பருமன் மற்றும் வேறு சில வாழ்க்கைமுறை சார்ந்த பிரச்சனைகளை தவிர்க்க நாம் சமச்சீரான மற்றும் ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது முக்கியம். நம் உடல் சரியாக இயங்குவதற்கு எல்லா வகையான ஊட்டச்சத்துகளும் அதற்கு தேவை.

மேலும் சரியான அளவு கலோரிகளை நாம் தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக கலோரிகள் உடல் எடையை அதிகரிக்க கூடும். இதன் காரணமாகவே உடல் பருமன் பிரச்சனை உண்டாகிறது. உடல் பருமன் பிரச்சினையில் இருந்து மீண்டு வர இளநீர் எவ்வாறு உதவுகிறது என்பதை இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம்.

தேங்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை சேர்க்கிறது. அதிலும் கோடை காலத்தில் இளநீர் பருகுவது ஏராளமான பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. இளநீர் கிடைக்காதவர்கள் தேங்காயை கூட சாப்பிடலாம்.

இளநீரை ஒருவர் நாளின் எந்த நேரத்திலும் பருகலாம். இளநீரை உட்கொள்வது இளநீரில் காணப்படும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நமது உடலுக்கு அவசியமானவை. இது உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை அளித்து நம்மை புத்துணர்ச்சியோடு இருக்க உதவுகிறது. இளநீரில் கலோரிகள் குறைவாக உள்ளது. வயிற்றில் இருக்கக்கூடிய புண்களை ஆற்ற இளநீர் உதவுகிறது.

செரிமான பிரச்சனைகளை சீராக்கி உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலமாக உடல் எடை குறைகிறது. இளநீரில் குறைந்த கார்போஹைட்ரேட் இருப்பதன் காரணமாக நமக்கு இளநீர் பருகிய உடன் நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காது. ஒரு நாளைக்கு ஒருவர் மூன்று முதல் நான்கு முறை இளநீர் பருகலாம். இவ்வாறு தினமும் செய்து வர உடல் எடை விரைவாக குறையும்.

இளநீரில் வைட்டமின் சி, பி1, இ போன்ற சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. இளநீரில் இருக்கக்கூடிய நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் வளர்ச்சி எதிர்ப்பு பண்புகள் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அடிக்கடி நோய்வாய் படுபவர்கள் தினமும் இளநீர் அருந்தி வர நல்ல முன்னேற்றம் தெரியும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 3860

0

0