நீரிழிவு நோயாளிகளுக்கு சஞ்சீவி மருந்தாக செயல்படும் இலை!!!
Author: Hemalatha Ramkumar30 ஜூன் 2023, 10:28 காலை
இன்று மாறி வரும் வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்க வழக்கங்கள் காரணமாக பெரும்பாலான நபர்கள் நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. நீரழிவு நோய் என்பது ஒருவரின் ஆயுளை குறைத்து விடக்கூடிய குணப்படுத்த இயலாத ஒரு நோயாகும். ரத்தத்தில் இருக்கக்கூடிய சர்க்கரையை கட்டுப்படுத்த பலவிதமான டிப்ஸ்கள் சொல்லப்பட்டு வந்தாலும், சர்க்கரை அளவை ஒரு சில நிமிடங்களிலேயே குறைத்து விடும் ஒரு காய் பற்றி பலருக்கும் இன்னும் தெரிவதில்லை.
இந்தியாவில் மட்டும் 12 மில்லியன் மக்கள் நீரிழிவு நோய் பாதிப்பிற்கு ஆளாகி உள்ளனர். நமது உணவு மற்றும் வாழ்க்கை முறையில் ஒரு சில மாற்றங்களை செய்தால் மட்டுமே நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கலாம். நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் ஒரு இலை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சேப்பங்கிழங்கு பற்றி நிச்சயமாக கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் சேப்பங்கிழங்கு இலைகளில் ஏராளமான மருத்துவ குணங்கள் பொதிந்துள்ளது. இது பலருக்கும் தெரிவதில்லை. சேப்பங்கிழங்கில் எதிர்ப்பு மாவட்ட சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. இது ரத்தத்தின் சர்க்கரை அளவை குறைக்கவும், இதய நோய்கள் மற்றும் புற்றுநோய் ஏற்படுவதைக் குறைக்கவும் உதவுகிறது.
சேப்பங்கிழங்கில் இருக்கக்கூடிய ஆக்ஸிஜனேற்றிகள், பாலிசாக்கரைடுகள், நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின் சி, இ, ஆர்பி, பொட்டாசியம் போன்றவை ரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது. சேப்பங்கிழங்கு மட்டுமல்லாமல் அதன் இலைகளிலும் ஏராளமான சத்துக்கள் இருக்கிறது. அவற்றிற்கும் இரத்த சர்க்கரையை குறைக்கும் பண்புகள் உள்ளது. இது தேசிய சுகாதார நிறுவனம் நடத்திய ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சேப்பங்கிழங்கு இலைகளை அரைத்து அதன் சாற்றை தொடர்ந்து குடித்து வந்தால் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படும். இதில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் மாவுச்சத்து இருப்பதால் ரத்தத்தின் சர்க்கரையை சீராக வைக்கிறது. அதுமட்டுமல்லாமல் செரிமானத்தையும் மேம்படுத்துகிறது. இதய நோய்கள் ஏற்படுவதை தடுப்பது முதல் ரத்த அழுத்தம், கண் சார்ந்த நோய்கள், நோய் எதிர்ப்பு சக்தி போன்றவற்றில் சேப்பங்கிழங்கு இலைச்சாறு மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
2
0