நீரிழிவு நோயாளிகளுக்காகவே கேழ்வரகில் பொதிந்திருக்கும் எண்ணற்ற பலன்கள்!!!

Author: Hemalatha Ramkumar
2 July 2023, 2:25 pm
Quick Share

இன்று இந்தியாவில் நீரழிவு நோய் ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக மாறி வருகிறது. 100 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்களுக்கு நீரிழிவு நோய் இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி சங்கம் தெரிவித்துள்ளது. அதிலும் வகை இரண்டு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தங்களது உணவு முறையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில் ராகி நீரிழிவு நோயுடன் வாழும் நபர்களுக்கு அற்புதமான உணவாக அமைகிறது. கேழ்வரகு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு ஏராளமான நன்மைகளை அள்ளித் தருகிறது. அவற்றில் சிலவற்றை இந்த பதிவில் மூலம் தெரிந்து கொள்வோம்:

ராகியில் குறைந்த கிளைசெமிக் அளவு உள்ளது. அதாவது அதிக கிளைசிமிக் அளவு கொண்ட உணவுகளில் உணவுகளை சாப்பிடும் பொழுது நமது ரத்த சர்க்கரை அளவில் திடீர் அதிகரிப்பு ஏற்படுகிறது. ஆகவே நீரழிவு நோயால் அவதிப்படுபவர்கள் குறைந்த கிளைசிமிக் அளவு கொண்ட உணவுகளை சாப்பிடுவது அவசியம்.

கேழ்வரகில் அதிக உணவு நார்ச்சத்து குறிப்பாக கரையக்கூடிய நார்ச்சத்து காணப்படுகிறது. இது நீரிழிவு நோயை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. குளுக்கோஸை குறைவாக உறிஞ்சுவதன் மூலமாகவும் ரத்த சர்க்கரை அளவில் ஏற்படும் திடீர் அதிகரிப்பை தடுப்பதன் மூலமாகவும் உணவு நார்ச்சத்து நீரிழிவு நோயாளிக்கு உதவி புரிகிறது.

கேழ்வரகில் வைட்டமின்கள் B3, B6 மற்றும் கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் எக்கச்சக்கமாக காணப்படுகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் ஒருவரது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தி நீரிழிவு தொடர்பான சிக்கல்களை சமாளிக்கவும் உதவுகிறது.
கேழ்வரகில் அதிக நார்ச்சத்து இருப்பதன் காரணமாக இது விரைவாகவே வயிறு நிரம்பிய உணர்வை கொடுத்து பசியை கட்டுப்படுத்துகிறது. ஆகையால் இது எடை மேலாண்மையில் முக்கிய பங்கு வகிக்கிறது. ரத்த சர்க்கரை அளவுகளை ஒருவர் கட்டுப்படுத்த உடல் எடையை சரியாக பராமரிப்பது அவசியம்.

கேழ்வரகில் குளூட்டன் இல்லை. இதன் காரணமாக இது நீரிழிவு நோய் கொண்டவர்களுக்கு ஒரு அற்புதமான உணவாக அமைகிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 8354

1

0